பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 செம்மொழி - உள்ளும் புறமும்

கூடும் எதிர்காலத்தில் தமிழ் உலகப் பெரும் மொழிகளில் ஒன்றாக மலர்ந்து மணம் வீசும் இனிய சூழல் உருவாகி தமிழுக்குப் பொற்காலமாயமையும்

தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெற எது தடை?

தமிழ் செம்மொழியாக அங்கீகரிப்பதற்கு வேண்டிய அனைத்துத் தகுதிப்பாடுகளும் இருந்தும், செம்மொழியாவதால் தமிழுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நலன்களையும் நன்கு அறிந்தும், அதனை செம்மொழியாக அங்கீகரிக்க எது தடையாக உள்ளது என்பதையும் நாம் அனுமானித்தறிய கடமைப் பட்டுள்ளோம்

இன்றைய சூழலில் யார் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமோ அந்த ஆட்சியினர் என்ன என்பதில் கருத்துன்றுவதற்கு மாறாக யார் என்பதில் அதிகம் கருத்துன்றும் போக்கு உள்ளவர்களாக இருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது எதையும் சமயக் கண்ணோட்டத் தோடு காணும் மனஇயல்பு அவர்களிடம் அழுத்தம் கொண்டிருப்பதால் இந்து சமய மொழியான சம்ஸ்கிருதத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சமயச் சார்பிலா சமுதாய மொழியாயமைந்துள்ள தமிழ் மொழிக்குத் தர விரும்பாத மனநிலை அரசோச்சிக் கொண்டிருப்பதாகக் கருத வேண்டியுள்ளது

தாங்கள் சமய அடிப்படையில் இறை மொழியாக கடவுளர்கட்குரிய மொழியாக அமைந்துள்ள சம்ஸ்கிருத மொழிக்கு இணையாக - சம மதிப்பில் - தமிழ் வருவதை அவர்கள் விரும்பாத நிலையே நிலவுகிறது எனக் கூறலாம். இந்தியா