பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

செயலும் செயல் திறனும்செய்யப்படுகிறது. பயனற்ற உழைப்பை எவரும் செய்யமாட்டார்கள். உடலின் உழைப்பால் வரும் பயன் நம் வாழ்க்கைக்குப் பயன்படுகிறது. எனவே, முதலில் நமக்காகவாகிலும் நாம் உழைத்தாக வேண்டும். அஃது ஒரு வகையில் தன்னலத்தையே அடிப்படையாகக் கொண்டது என்றாலும், நாம் உழைத்துச் சாப்பிடுகிறோம் என்ற மண், நிறைவை நாம் பெறுகிறோம். உலகில் உள்ள பெரும்பாலோர் அவர்களுக்காகவே உழைக்கிறார்கள். ஆனால் பலர் முழு உழைப்புத் தராமல் அரைகுறை உழைப்பாலேயே முழுப் பயன் பெற விரும்புகிறார்கள். இன்னும் சிலர் அறவே உழைக்காமலேயே உண்ண - உயிர்வாழ விரும்புகிறார்கள். அவர்கள் பிறரின் உழைப்பைச் சுரண்டி வாழ்கிறார்கள். அவர்கள் சிறுமைக்குரியவர்கள். கண்டிக்கவும் தண்டிக்கவும் தக்கவர்கள்.

உழைப்பை இந்த வகையில் கீழுள்ளவாறு வகைப்படுத்தலாம்.

1. உழைப்பு அல்லது செயல் நமக்காக மட்டும் பயன்படுவது.

2. அது, நமக்காகவும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் பயன்படுவது.

3. அது, நமக்காகவும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நம்மைப் போல் உள்ள பிறர்க்காகவும் பயன்படுவது.

4. அது நமக்கும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நம்மைப் ப்ோல் உள்ள பிறர்க்கும், எப்பொழுதும் பயன்படுவது.

இவ்வகைகளை இன்னும் பலவாறும் பிரித்துக் கூறலாம். இவ்வரிசையுள் உள்ள ஒன்று, முன்னுள்ள ஒன்றை விடப் பெருமையானது. நான்காம் வகை உழைப்பை நாம் செய்யும் பொழுது, நம் வாழ்க்கை மிகப் பெருமை பெறுவதாக அமைந்துவிடும். இவற்றை இவ்வளவில் நிறுத்திக் கொண்டு களைப்பு ஏற்படும்படி உழைத்தல் என்னும் நிலை என்பது தொடர்பாக இன்னும் சிறிது மேலே கூறுவோம்.

நாம் எந்தச் செயலைச் செய்தாலும் அதில், நம் முழு உடலையும் ஈடுபடுத்த வேண்டும். சிலர் உடல் உழைப்பே இன்றி அறிவுழைப்பில் மட்டும் ஈடுபடுவர். அத்தகையோர் காலப்போக்கில் உடல் நலம் குன்றவே செய்வர். எனவே, அத்தகையவர்கள் உடலாலும் சில உழைப்புகளைக் கட்டாயம் செய்தல் வேண்டும். சில குறிப்பிட்ட நேரங்களை ஒதுக்கிக் கொண்டு, நடத்தல், ஒடுதல், தாண்டுதல், நீந்துதல், உடற்பயிற்சி செய்தல், விளையாடுதல் போன்ற உடலியக்க செயற்பாடுகளைச் செய்தல் வேண்டும் அல்லாக்கால் உடல் உறுப்புகள் இயக்கமின்றிக் கட்டாயம் நோயுறும் அறிவுழைப்புள்ளவர்கள் உடலை ஒரே இடத்தில் வைத்துக் கொண்டே செயல்பட முடியும். சில கலையுழைப்பாளர்களும் அவ்வாறே இயங்குவர். ஒவியம் வரைதல் சிலை செய்தல், எழுதுதல் முதலிய கலை, அறிவு உழைப்பாளர்களுக்கு