பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/243

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

241வெளிப்படுத்தப்பெற்ற இக்கருத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்று எண்ணிய பிரெஞ்சுச் சிற்பி, 1871 இல் நியூயார்க்கு சென்று இட அமைப்பையும் அங்கு வைக்கப்பெறும் சிலையின் பெருமாண்ட அளவையும் கணித்து வந்தார்.

எகிப்து நாட்டில் உள்ள மிகு பெயர் பெற்ற பாறாங்கல் உருவங்கள் அச்சிற்பியின் மனத்தில் சிலைக்கு ஒரு பெரும வடிவத்தையும் உருவத்தின் அளவையும் தோற்றுவித்தன. மற்றும் சிலைப் பிராட்டியின் உருவத்திற்கேற்ற முக அமைப்புக்குச் சிற்பி, தம் அன்னையார் முகத் தோற்றத்தையும், உடல் வடிவத்திற்குத் தம் காதலியின் எழில் வடிவத்தையும் இணைத்துக் கற்பனை செய்து வைத்துக் கொண்டார். மேலும் இவ்வுரிமைக் கன்னியின் சிலை கலங்கரை விளக்கமாகவும் பயன்பட வேண்டும் என்று கருதப்பட்டதையும் நினைவில் இருத்திக் கொண்டார்.

அமைக்க விருந்த சிலை, பீடம் ஆகியவற்றுடன் கலங்கரை விளக்கை ஏந்தியிருக்க வேண்டிய வலக்கை வரை, உயரம் 300 அடிகள் இருக்க வேண்டும் என்றும், இவற்றுள் சிலையின் உயரம் மட்டும் 15 அடி இருக்க வேண்டும் என்றும் சிற்பி தன் மனத்துள் திட்டமிட்டுக் கொண்டார். சிலையைத் தாங்குவதற்கு உள்ள பீடம் 89 அடி. அதற்கடியில் உள்ள தளம் 6 அடி உயரமுள்ள கருங்கல்லால் அமைய வேண்டியது. உலகிலேயே இதுதான் மிக உயரமான சிலையாக இருக்க வேண்டும் என்றும் சிற்பி உறுதிப்படுத்திக் கொண்டார்.

சிலை வடித்து, உருவாக்கிய பணி தலைசிறந்த ஒரு தொழில்நுட்பப் பணியாகும் என்பதை அனைத்துத் துறை அறிஞர்களுமே ஒப்புவர்.

1875 ஆம் ஆண்டின் இறுதியில், சிற்பி பர்தோல்டி தம் உள்ளத்தில் கருவாகித் திருவாகி நின்ற சிலைக்கு 4 அடி உயரமுள்ள களிமண் மாதிரி உருவம் ஒந்றை உருவாக்கினார். அம்மாதிரிச் சிலையின் சாயல் வடிவத்திற்கு ஒரு பிரெஞ்சு அழகி ஒருத்தியின் சாயல் (Style) அமைப்புப் பயன்படுத்தப் பெற்றது. வடிவத்தைச் சிற்பி, தாம் எண்ணிய அளவிற்குத் திருத்தமாக அமைத்துக் கொண்டபின், அதனினும் பெரிய வடிவத்தை வெள்ளைக் களியத்தில் (Plaster of Paris) வடித்தெடுத்தார். பின்னர் அதையும் சீர்திருத்தி, அதனினும் பெரிய வடிவம் என இப்படியாக இறுதியில் 36 அடி உயரமுள்ள மிகத் திருந்திய வடிவம் கொண்ட ஒரு சிலையை வெள்ளைக் களியத்திலே செய்து முடித்தார். இவ்வாறு - - கொண்ட ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒன்பதினாயிரம் (9000) கோண, பரும, நுட்ப அளவைகளை எடுக்க வேண்டியிருந்தது.