பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

243



எதிர்த்து நிற்கும் வலுவுடையதாகவும், நிலத்தின் ஈர்ப்பாற்றலுக்கு ஈடுகொடுக்கக் கூடியதாகவும் அமைக்க வேண்டியிருந்தது. இவற்றைக் கருத்தில் கொண்டு சிலையின் செப்புத் தோலைத் தாங்குவதற்கு ஈஃபில் மிகவும் அறிவு நுட்பமாக இரும்புப் பாளங்களைப் பயன்படுத்திச் சிலந்தி வலைபோல், சிலையின் உட்புற வளைவு சுழிவுகளுக்கு ஏற்றவாறு பின்னியிருந்தார். ஒவ்வோர் இரும்புப் பாளமும் இரண்டு விரலம் (அங்குலம்) அகலமும், அரை விரலத்திற்கு மேல் கனமும் உடையது. இந்தப் பாளங்கள் தோலுடன் ‘சாடில்சு’ என்று கூறப்படும் செம்பு இணைப்பட்டைகளால் இணைக்கப்பட்டன. இப்பட்டைகள் பாளங்களுக்கு மேலாக வந்து அந்தந்த இடத்தில் திருகாணிகளால் பொருத்தப்பட்டன. இவ்வாறு ஏறத்தாழ 1500 இணைப் பட்டைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வமைப்பால், தட்டையான பாளங்கள் காற்று அடிக்கும் போது, தாராளமாக அசைந்து கொடுக்கவும், தகட்டுத் தோலும் காற்றுக்கு ஏற்றவாறு இயங்கவும் முடியும். மேலும் தட்வெப்ப நிலையின் மாறுதல்களுக்கு ஏற்ப விரிவடையவோ சுருங்கவோ இயலும்.

இவ்வாறு சிலையின் மாதிரி வடிவம் தொடங்கி அதன் முழுவடிவமும் திருத்தமாக உருவாக ஒன்பது ஆண்டுகள் ஆயின. சிலை அழகு கொழித்தது. அமைதி, அருள், நம்பிக்கை, பெருமிதம், வாழ்க்கை ஆர்வம் - அனைத்து உணர்வுகளும் முகத்தில் தவழுகின்றன. உடலை முழு உரிமையில் இருக்கச் செய்யும் அழுத்திப் பிடிக்காத தொளதொளத்த மேலாடை சிலைப் பெருமாட்டியின் ஓங்கி உயர்த்திய வலக்கையில் கதிரொளி வீசும் எரிசுடர். அது கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டது. இடக்கையில் அரசியல் அமைப்பை மக்களுக்கு உரிமையாக்கும் வகையில் பொத்தகம் ஒன்று. பக்கவாட்டிலே அணைந்தவாறு, தலையில் உலகின் ஏழு கண்டங்களையும் ஏழு கடல்களையும் குறிக்கின்ற வகையில் ஏழு கதிர்வீச்சுகள் கொண்ட அழகிய மகுடம், அத்தனையும் சிலையின் அழகுக்கு அழகு ஊட்டின.

சிலை உருவாகி வருகையில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் பாரீசு நகர மக்களும் பிற நாட்டினரும் நூற்றுக் கணக்கில் வந்து பார்த்த வண்ணமேயிருந்து வந்தனர். சிலையின் இறுதி வடிவம் கூரைக்கு மேல் போய்விட்டது.

சிலையின் எடை 280 கல்லெடை (Ton) ஆகியது. இது பிரெஞ்சு நாட்டு மக்கள் அமெரிக்கா நாட்டு மக்களுக்குத் தரும் அன்பளிப்பாகக் கருதப்பட்டது. 1884 ஆம் ஆண்டு சூலை மாதம் 4 ஆம் பக்கல் ஒரு