பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

245



4. தலையை அமைத்த வளைவுகள் சரியான நிலையில் இருக்கவில்லை.

5. நடுத்தண்டுக்கு அடிப்படையான கம்பிகள் நன்கு செயல்படவில்லை. ஒரு கம்பி சரியான விறைப்பில் இல்லை. அவற்றில் இரண்டு சிலையின் விலா எலும்புகளை அழுத்திக் கொண்டிருந்தன.

இவ்வாறாகப் பல சிதைவுகள் செயலின் திறப்பாட்டைக் குறைவுப்படுத்திக் காட்டியதில் வியப்பில்லையன்றோ?

இனி, கடந்த 1985 ஆம் ஆண்டில் சிலைக்கு 100 ஆண்டு முடிவடைந்தது. அந்த ஆண்டில் சிலையின் பேணுகைப் பொறுப்பை ஏற்றிருந்த தேசிய பூங்காப் பேணுகை நிறுவனம், பல்திற வல்லுநர்களைக் கொண்டு ஆய்ந்ததில் பெரும் கவலை கொண்டது. ஏன் தெரியுமா? சிலைச் சீமாட்டி பலவகையிலும் நோயுற்றிருந்தாள்.

மக்களுக்கு நோய்வந்தால், மருத்துவர் நோயாளிகளிடமிருந்து எவ்வளவு புலனங்களைப் பெற முடியுமோ, அவ்வளவையும் பெறுவது போலவே, உரிமைச் சிலைக்கு ஏற்பட்ட சிதைவு நோய்க்கும் கட்டடக்கலை, பொறியியற் கலை மற்றும் கலைத்துறை வல்லுநர்களான மருத்துவர்களும், வண்டி வண்டியாக ஆய்வுக் கருவிகளைக் கொண்டு வந்து, சிலையின் உயிர்நாடிகள் போன்ற உறுப்புகளை ஆய்வு செய்தனர்.

சிலையின் சட்டம் போலவே 8 அடி உயரமுள்ள மாதிரி ஒன்றை அமைத்து, ஒரு கணிப்பொறி மாதிரி ஒன்றையும் உருவாக்கினர். பின்னர் கணிப்பொறிக்குச் சில பல கட்டளைகளை வழங்கினர். அதன் பின்னர் தொழிலாளர்கள் சிலையைச் சுற்றிச் சாரங்களை அமைத்தனர். இஃது எளிதான பணியன்று. 300 அடி உயரமுள்ள சிலைக்குச் சாரங்கள் அமைப்பது தொழில்நுட்பம் மிகுந்த கடினமான பணியாகும். அதுவும் சிலையின் பழுதுபார்ப்பு முடியும் வரை, சாரங்கள் துரு ஏறாமல் இருக்க வேண்டும். இனி, சாரமும் சிலையை எங்கும் தொடாமல், அதைச் சுற்றியிருக்கவும் வேண்டும்.

1980-ஆம் ஆண்டுதான், அஃதாவது சிலை நிறுவிய 94 ஆண்டுகளுக்குப் பின்னர்தான், பெரும் குளறுபாடு அடைந்திருப்பது கண்டுபிடிக்கப் பெற்றது. மொத்தம 13 இடங்கள் சேதமுற்றிருப்பது, அறிந்து கொள்ளப் பெற்றது.

சிலையின் தோல் செம்பினால் ஆனது.எனவே காலத்தால் செம்பு களிம்பு பிடித்துவிட்டது. நிறமும்மாறிவிட்டது. தோலுக்குள்ளே எலும்புக்