பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

செயலும் செயல் திறனும்


அவற்றை அடுத்து, அச்சிலையினது சாயல், முகக்குறிப்பு, பொதுவான வடிவ அமைப்பு, அதனைச் செதுக்கிய முறை, உணர்வு வெளிப்பாடு, தோற்றம் முதலியன பற்றியெல்லாம் கருத்துச் செலுத்திச் செயல் ஒட்டம் ஆகும். மொத்தத்தில் செப்பம் என்பது உடலைப் போன்றதும், துட்பம் என்பது அதன் உறுப்புகளைப் போன்றதும், ஒட்பம் என்பது அதன் உயிர்த் தன்மை போன்றதும் ஆகும் என்க.

இவ்வாறு மூவகையாகவும் செய்வதில் நாம் எப்படி எப்படியெல்லாம் கருத்தாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கலாம் என்று, அவ்வினை முடிவில் அடையும் பயனை, ஊதியத்தை, இன்பத்தைப் பற்றி நினைவு கொள்ளாமல், வினையை விரும்புவது இரண்டாம் படிநிலையாகும்.

3. இன்பம் விரும்பாமை

‘இன்பம் விழையாது, வினை விழைதல்’ என்று திருக்குறள் (எண் 615) இதனைக் கூறும். ஏன் இன்பத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கக் கூடாது விரும்பக்கூடாது என்று கூறப்பெறுகிறது என்றால், இன்பம் விழைபவன், இடையில் எதிர்பாராத வகையில் வினைக்கு இடையூறு தேர்ந்தால், துன்பம் வந்தால், ஊக்கம் குன்றிப்போவான், வினைச் சோர்வு கொள்வான் ஆகையால், இன்டவிழைவு இருத்தல் கூடாது எனப் பெற்றது. அஃதாவது இன்பமே ஒரு வினையின் நோக்கமாக இருத்தல் கூடாது. இன்பம், துன்பம் இரண்டு உணர்வுகளையும் ஓர் உயிர் நுகரப் பெறுதல் வேண்டும். அவை இரண்டையும் சமமாகக் கருதுதல் வேண்டும் என்பது உயிரியல் கோட்பாடு. இவ்வுணர்வைப் பெறுதற்கு வினையிடுபாடுதான் நமக்கு வழி வினையின் முடிவில் நாம் காண்பன, ஒன்று வினைமுடிபால் வரும் இன்பம்; இரண்டு அதன் பயனால் அஃதாவது அதற்குரிய விலையாக வரும் பொருளால் நாம் பெறும் இன்பம். இவ்விரண்டனுள் வினையின்பமே உயர்ந்ததாகும்; பொருளின்பம் சிறியதாகும்.ஒரு வினையை நாம் முழுமையாகச் செய்து முடித்தோம் என்னும் இன்பம் அதனால் வரும் பொருளால் நமக்குக் கிடைப்பதில்லை. வினையின்பம் உயிரை மகிழ்விக்கும் இன்பம், பொருளின்பம் உடலை மகிழ்விக்கும் இன்பம். எனவே, உடல் அழிந்து பேர்வது போல், அப்பொருளும் அதால் வரும் இன்பமும் விரைவில் அழிந்து போய் விடுவனவாகும். ஆகவே தான் வினைவிழைவான் இன்பம் விழயக்கூடாது எனப் பெற்றது. அவன் தான், வினைக்கிடையில் வரும் எத்தகைய துன்பத்தாலும் மனநெகிழ்ச்சியும், அதனால் வினை நெகிழ்ச்சியும், அதன் வழி ஊக்கக் குலைவும் கொள்ளான் என்றனர்.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்ப உறுதல் இலன்

(628)

என்றார் திருவள்ளுவர்.