பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9. எதிர்ப்புநிலை வலிமையறிதல்

1. ஒவ்வொரு வினைக்கும் ஒர் எதிர்வினை உண்டு

வினைசெயப் புகுவான், தன் வலியைத் தானே நன்குணர்ந்த நிலையில், அந்த வினையில் துணிவுடன் ஈடுபடலாம். ஆனால் அவ்வாறு ஈடுபடுமுன், அவ்வினைக்கு முன்னாகவுள்ள எதிர்ப்பு நிலைகளையும் அறிந்து கொள்ளுதல் மிகவும் இன்றியமையாதது. உலகில் எதிர்ப்பின்றி எந்த இயக்கமும் இல்லை. ஒவ்வொரு வினைக்கும், அதே ஆற்றலுடைய நேர் எதிர்வினையுண்டு என்பது அறிவியல் கோட்பாடு. இயற்கை வினைகளுக்கு மட்டுமின்றி, மாந்த முயற்சிகளுக்கும் எதிர்ப்பு வினைகள் உண்டு. வினையும் அதற்கு எதிர்வினையும் சேர்ந்துதான் வினையியக்கம் உருவாகிறது. மின்சாரத்தில் நேர் மின்னாற்றல் எதிர் மின்னாற்றல் என இருவகை ஆற்றல் நிலைகள் உண்டு என்பதைப் பலரும் அறிவர். இவை இரண்டும் சேர்ந்த பின்தான் மின்னாற்றல் இயங்குகிறது. அது போலவே ஒரு வினையியக்கத்திற்கு எதிர்ப்பு வினையியக்கம் மிகவும் இயல்பானது. இவ்விடத்தில் இயற்கையமைப்பின் ஒர் இயக்கக் கூறை நாம் நன்கு உணர்ந்து கொள்ளல் வேண்டும், எதிர்ப்பின்றி எந்த இயக்கமும் சிறப்புறாது. இஃது ஓர் இயற்கைத் தேர்வு நிலை.


2. எதிர்ப்பு இயற்கையே

ஒருவன் ஒரு வினை செய்யப் புகுகையில் எதிர்ப்பு வராமல் இருப்பின் இயற்கைத் தூண்டுதல் இராது. எனவே, எதிர்ப்பு என்பது ஓர் இயற்கைத் தூண்டுதலே. வினையில் ஈடுபடுவானை, அவ்வெதிர்ப்பு நிலை, அவ்வினையில் நன்கு அழுத்தி ஈடுபட வைக்கிறது. அவனை அதற்குத் தகுதியுடையவனாக்குகிறது. இல்லெனில் அவன் ஊக்கம் குறைந்து போவான். எதிர்ப்பு நிலை உருவாக உருவாகத்தான் அவன் அவ்வினையில் படிந்து ஈடுபட முடியும். உள்ளூக்கம் பெற முடியும். இயற்கை, அவ்வெதிர்ப்புகளை உருவாக்கும் வகையில் ஒருவனை அவ்வினைக்கும் தகுதியுடையவனாக்குகிறது. அவ்வெதிர்ப்பு இல்லையெனில், அவன் அவ்வினைக்கண் மிகவும் ஈடுபாடு குறைந்தவனாகப் போய்விடுவான். அவன் ஈடுபாட்டை மிகுவிக்கவே, இயற்கை அவன் செய்யும் வினைக்கு எதிர் வினைகளைத் தோற்றுவிக்கிறது. எதிர் வினை தோன்றும்பொழுது, ஒருவன் தன்