பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

செயலும் செயல் திறனும்தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றவரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல்.

(56)

என்பது திருவள்ளுவம்.

5. வினையறிந்தார் நட்பு

{{gap}வினைத்திறம் உடையவரை நாம் நட்பாக்கிக் கொள்ளுதல் வேண்டும். அவரை நம்மினும் வேறாக நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் நம் வினையால் பொருட்பயனை உண்டாக்கிக் கொள்ளமுடியாது. வினைத் திறம் உடையவனை வினையுடையான் என்பார் திருவள்ளுவர். பொருளுடையவனைப் பொருளுடையான் என்பதுபோல், வினையுடையான் வினைத்திறம் உடையான் ஆகின்றான்.

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

நினைப்பானை நீங்கும் திரு.

(519)

வினைத்திறம் உடையானை வேறாகக் கருதக்கூடாது. நமக்குப் பசிக்கின்றபொழுது அவனுக்கும் பசிக்கும் என்று கருத வேண்டும். நாம் உண்ணும்பொழுது அவனையும் உண்ணச் செய்தல் வேண்டும். நாம் உறங்கப் போகும்பொழுது அவனையும் ஒய்வெடுத்து உறங்கும்படி செய்தல் வேண்டும். அவனுடைய தொடர்பை நட்பாகக் கருதுதல் வேண்டும். இன்னும் கேண்மை என்பது நட்பு மட்டுமன்று. சொந்தமும் ஆகும். எனவே, நண்பனாக மட்டுமன்று. சொந்தக்காரனாகவும் கருதுதல் வேண்டும் அப்பொழுதுதான் அவன் வினைத்திறத்தை நமக்குக் கற்றுத்தர விரும்புவான். தாய் தன் சொந்தப் பிள்ளைக்குத்தானே பால் தர விரும்புவாள். சொந்தமல்லாத பிள்ளைக்குப் பால் தருவதை எந்தத் தாயும் அவ்வளவாக விரும்ப மாட்டாளன்றோ?

6. நல்வழி வரவு

ஆகவே, வினைத்திறம் உடையவர்களைச் சொந்தமாகக் கருதிப் போற்றிக் கொள்ள வேண்டும். இனி, வினைத்திறம் உடையவர்களுக்கு இன்னொரு தகுதியும் தேவை. உலகியல் நிலையில் சரியானதையும் தவறானதையும் அவர்கள் தெரிந்து வினையில் ஈடுபடுதல் இன்றியமையாதது. உலக நயங்களை நியாயங்களை அவர் அறிந்திருத்தல் மிக மிகத் தேவை. இல்லாவிடில், வினைத்திறத்துடன் கள்ளவழிகளையும், தவறான போக்குகளையும் நமக்குக் காட்டிவிடலாம். பணம் ஈட்டுவதற்காக மட்டும் நாம் ஒரு செயலைச் செய்யக் கூடாது. நல்ல வழியில் வராத எந்தவகை சட்டமும் சிறந்த பயனைத் தராது. நல்லவர்கள், அறிவுடையவர்கள் அத்தகைய பண வருவாயை விரும்புதல்