பக்கம்:செவ்வானம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 00 செவ்வானம் 'நான் ஏன் சொல்கிறேன் என்றால் நாட்டில் நாலாவகைகளிலும் நமது செல்வாக்கை நிலை நிறுத்தவேண்டும். கலை, அரசியல், தொழில், பத்திரிகை முதலிய பல முனைகளிலும் நமது ஆதிக்கத்தை நாட்டி விட்டால் அப்புறம் நம்மை யார் என்ன செய்துவிட முடியும்? எல்லாப்பயல்களும் நம்ம தயவை எதிர்பார்த்துக் கிடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடாதா என்ன? இந்த நாட்டின் மகத்தான பிரபலஸ்தர், இவாள் இல்லாமல் எந்தக் காரியமும் நடக்க முடியாது என்கிற மாதிரி ஒரு மயக்கத்தை சிருஷ்டித்து விடலாம். நான் சொல்றது புரியலே?" புரியுது புரியுது. ஆனால் பணம் அதிகமாகக் காலியாகு மேன்னு தான் யோசிக்கிறேன்' என்று தலையைத் தடவினார் முதலாளி 'நீங்க அதைப் பற்றிக் கவலைப்படலாமா? பணத்தைப் போட்டுத்தானே பணத்தை இழுக்கணும். கெண்டையை வீசி வராலை இழுக்கிறமாதிரி, ஆரம்பத்திலே செலவாகத் தான் செய்யும். ஆனால் பின்னாலே அதுக்குத் தகுந்த பலன் கிடைக்குமே! அதை நீங்க மறந்து விடலாமா முதலாளி?' என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார் சிவசைலம். 'உம், பார்க்கலாம் என்று தான் சொல்லமுடிந்தது முதலாளியினால், 19 ஒவ்வொரு நாளும் குமுதத்திற்கு வேதனைச் சுமையாகவே தோன்றியது. வாழ்க்கை சுடும் வெயிலாக இருந்தது அவளுக்கு கனவுகாணும் உள்ளம் எதிர்காலத்தில் இனிய பசுமையைக் காட்டி வந்தது. நிகழ்காலத்தை விரட்டி விட்டு முன் வந்த அனுபவம் 'எல்லாம் வறண்டகானல் தான் என்று நிரூபித்தது. அவள் வாழ்க்கை யிலே பகட்டும் மினுக்கும் பெறவேண்டும் என்று விரும்பவில்லை. யோக்கியமாக நாளோட்டவேணும் என்றுதான் ஆசைப்பட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/102&oldid=841302" இலிருந்து மீள்விக்கப்பட்டது