பக்கம்:செவ்வானம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 101 முடியவில்லை. அவளுக்கு உதவிசெய்ய முன்வந்தவர்கள் அவள் தன் உடலைத் தரகுக் கூலியாகத் தந்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். காதல் என்ற பெயரில் அவளைக் கறைபடுத்தத் தயாராக இருந்தவர்கள் அவளது வாழ்க்கை அந்தஸ்து பற்றி உறுதியளிக்க முன்வரவில்லை. கல்யாணம் என்ற பெயரில் அவளை ஏற்றுக்கொள்ள முன் வந்த ஒன்றிரண்டு பேரை அவள் மனம் விரும்பவில்லை. வாழ்க்கையில் எதிர்படும் தொல்லைகளைச் சகித்துக் கொள்ள முடியும். ஆனால் இன்றியமையாத வாழ்க்கைத் தேவைகள் வஞ்சிக்கப்பட்டவர்கள் மேலும் மேலும் காலத்தில் கொடுமைக்கு உள்ளாக்கும்போது சகிப்புத்தன்மையை மட்டுமல்ல, மனத்தெம்பு. எதிர்கால நம்பிக்கை முதலியவைகளையும் இழந்துவிடுவது இயல்பே. உடை, உணவு வசிக்குமிடம் முதலிய அன்றாட அவசியத் தேவைகளில் குறை ஏற்படும்போது மனம் உற்சாகத்தை மறந்து விடுகிறது. எதுவும் செய்வது இயல்வதுமில்லை. செய்யவேண்டும் எனும் ஆசை எழுவதுமில்லை. சோம்பிக் கிடப்பதே பொழுது போக்காகி விடுகிறது. குமுதத்தின் தினசரி வாழ்க்கைத் திட்டம் அதுவேயாயிற்று. சில சமயங்களில் மனம் கூட சோம்பல் நிலையை அடைந்து விடுகிறது. எண்ணம், ஏக்கம், ஆசை, துடிப்புகள், கனவுகள் எதையும் சிருஷ்டிக்கத் தெம்பற்று சோர்ந்து கிடக்கும். திடீரென்று பழங்கால நிகழ்ச்சிகளின் நினைவு எழுந்து காரணமில்லாமல் அழுகையைத் துண்டலாம். குமுதம் அழுது அழுது காலம் கடத்தினாள். இப்படி எத்தனை காலம் வாழ்ந்துவிட முடியும் என்ற கேள்வி எல்லையில்லா எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தை எழுப்பியது. ஏதாவது நிகழும் செளக்கியமாக வாழ்ந்துவிடலாம் என்ற எண்ணம் நிறைந்து நின்றது முன்பு அவள் மனதில். பின் அது தேய்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/103&oldid=841303" இலிருந்து மீள்விக்கப்பட்டது