பக்கம்:செவ்வானம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} {}{ செவ்வாணம் தினங்களாகவே அவனது ஆத்திரமும் குழப்பமும் அதிகரித்து வந்தன. முதலாளி புன்னைவனம் அவர்களின் சுய விளம்பர முயற்சிகள் எல்லாம் சிறப்பாகத்தான் நடைபெற்றுவந்தன. கந்தர்வ கலா மண்டபம் திறப்பு விழாநிகழ்ந்து சில வாரங்கள்ஓடிவிட்டன. அன்பர் சிவசைலத்தின் சுயநலத் திட்டங்களும் வெற்றிகரமாக உருப்பெற்று வளர்ந்தன அடிக்கடி அவரை சாவித்திரியின் வீட்டிலே காண முடிந்தது. சியாமளா முதலாளியின் காரிலே உல்லாச பவனி போவதை நகரமக்கள் கண்டு இஷ்டம்போல் பேசி மகிழ எவ்வளவோ சந்தர்ப்பங்கள் கிடைத்தன. - நடிகர் ராமண்ணாவும் தலைவர் சுயம்பிரகாசமும் ஒன்றிரண்டு தடவைகள் செல்வர் புன்னைவனத்தின் விசேஷ உபசரிப்புக்கு உரியவர்களானார்கள் என்ற செய்தியும் தாமோதரனுக்கு எட்டியிருந்தது முதலாளியும் அவரது வழிகாட்டியும் உண்மையில் கந்தர்வ கலைக்கழகம் என்ற நாடகசபையைப் பிரமாதமாகத் தொடங்கி மகத்தான முறையிலே வளர்க்கத் திட்டமிட்டு உழைத்தார்களோ என்னவோ! ஆனால் வாழ்க்கை நாடகத்திலே தங்கள் வேஷங்களை மிகச் சிறப்பாக வகித்துப் பிறர் கவனத்தைக் கவர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் போக்கிற்குத் துணைசெய்யும் உபபாத்திரங்களாக விளங்கினார்கள் மற்றவர்கள். எல்லாவற்றையும் கவனித்த தாமோதரனுக்கு நாடகமே உலகம் என்று பாடி விட்டுச் சும்மா தன் பாட்டிலே போகத் தெரியவில்லை நாடகமே உலகம் என்பது நன்றாகப் புரிகிறது. ஆனால் அதில் நமக்குரிய வேஷம் என்ன என்பது தான் இன்னும் தெளிவாகப் புரியவில்லை என்று எண்ணி ஒதுங்கி, சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் இழுக்கும் இழுப்புகளின்படி இயங்கவும் மனம் வரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/106&oldid=841307" இலிருந்து மீள்விக்கப்பட்டது