பக்கம்:செவ்வானம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 105 தான் எவ்வளவோ சாதிக்கவேண்டும் தனக்காகக் காத்திருக்கும் விஷயங்கள் எத்தனையோ, தனது அரிய சிந்தனை மணிகளை அறிந்து வாழ்விலே உயர்வு பெறக்காத்திருப்பவர்கள் கணக்கற்றவர் என்ற நம்பிக்கையை அவனாகவே வளர்த்து விட்டான். அதனால்தான் தாமோதரன் நேர்மைக்காக, நீதிக்காக, உண்மையின் உயர்வுக்காக, மனிதத்தன்மையின் மேன்மைக்காக, வாழ்வின் வளத்துக்காகப் போராடும் பண்பினனாகத் தன்னை மாற்றிக் கொண்டான். உண்மையை உண்மைக்காகச் சொல்லியே தீர்ப்பது சொல்ல வேண்டியது நம் கடமை விளைவுகளைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?' என்ற இதய ஒலியுடன் அவன் தன் எண்ணங்களை எழுத்தாக்கினான். 'என் உள்ளம் எரிமலை, எனது எண்ணங்கள் சிரிக்கும் செந்தீ மடத்தனத்தை, சிறுமையை, வீணத்தனங்களை யெல்லாம் சுட்டெரிக்கும் தீயேயாகும். அவை எங்கும் பரவவேண்டும். எண்ணற்றோர் உள்ளத்திலே உண்மைச் சிறு பொறியைப் பதித்து, சிந்தனைத் தீயைத் துண்டி விடவழிசெய்யவேண்டும் என்று அவன் அடிக்கடி நினைப்பதுண்டு. உண்மையாளர்களின், சிந்தனைப் பெரியார்களின் உயர்ந்த எண்ணங்களை எல்லாம் மக்களிடையே பரப்ப வேண்டும் என்ற ஆசை.அவனுக்கிருந்தது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அவர்கள் சிந்திக்கும் திறம் பெற வேண்டும் அறிவு வளர்ச்சி பெற்றாக வேண்டும் என்று நம்பினான் அவன். பொருளாதார வளர்ச்சிக்கு வழியில்லாத மனிதர்கள் அறிவு வளர்ச்சி பற்றி அதிக அக்கறை காட்டுவதில்லை. பொருள் வளர்ச்சியில் மிகுந்துவிட்டவர்களோ அறிவைப் பற்றிய கவலைக்கே இடம் கொடுப்பதில்லை. தன்னைப் போன்ற ஒரு சிலரே பிறருக்காக இதய வேதனை பெற்று வாழ வேண்டியிருக்கிறது; மற்றவர்களோ அலட்சியமாக உருப்படத் தெரியாதவர்கள் என்று தங்களுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/107&oldid=841309" இலிருந்து மீள்விக்கப்பட்டது