பக்கம்:செவ்வானம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 9 அவன் அறிவிலே அதிர்ச்சி ஏற்பட்டு, அவனுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. பைத்தியமாகத்தான் ஆக்கி விடுவார்கள் அப்பொழுது, அந்த மேடையில் நிற்கும்போது எனக்கு வெறி பிடித்துவிட்டது மாதிரித்தான்.' ஆமாம். வெறி பிடித்தவன் போல்தான்பேசினான்தாமோதரன் சூழ்நிலை மறந்துவிட்டான். உணர்ச்சி, எண்ணங்களை உந்தித்தள்ள, வார்த்தைகள் பேச்சுவேகத்திலே தெளிவற்றுப் புரள்வதுபோல் உதிர, அவன் பேசினான். 'அந்தகாரச் சாயைகள்போல் வந்து, கர்ப்பக்கிரக இருள் முன்னின்று எனக்கு மோட்சம், எனக்கு மோட்சம் என்று தலைகவிழ்த்து முணுமுணுத்தார்கள் உங்கள் மூதாதையர்கள். உங்கள் இனத்தினரோ ஒட்டுப்பெட்டி முன் பணிந்து நின்று எனக்குப் பதவி, எனக்குப் பதவி என்று பிரார்த்தனை புரிகிறார்கள். பூசாரிகளை விழுந்து கும்பிட்டார்கள் உங்கள் முன்னோர். நீங்களோ அரசியல் தலைவர்களைக் கடவுளாக்கிக் கண்மூடி பக்தி செய்கிறீர்கள். என்னைக் கும்பிடாதே நான் சொன்னதைச் செய் என்றான் உங்கள் தலைவன். நீங்களோ நீ சொன்னது காற்றோடு போகும். உன்னையே நாங்கள் கும்பிடுவோம் என்று சிலைசெய்துவிட்டீர்கள். மதம் உங்கள் விரோதி என்றான் ஒரு தலைவன். நீங்களோ ஒன்பது மதங்களை ஏற்றுத் தடுமாறுகிறீர்கள். அரசியல் ஒரு மதம், பதவி மோகமும், பண ஆசையும் உங்கள் மதங்கள். அறியாமையும் ஆணவமும்.' எதிரே ஒற்றைக்குரல் ஒன்று வெடித்துச் சிதறியது போல் தொனித்தது. ஜன்னிவேகத்திலே சொற்களைக் கொட்டுகிறவன்போல் பேசி நின்ற தாமோதரன் உடல் பதறியது. அவன் எதிரே பார்த்தான். இருள். இருள் மயமாகத்தான் தோன்றியது. ஆனால் அங்கு இருள்தானா கவிந்து கிடந்தது? இல்லை. சமுதாயம், சமுதாயம் என்கிறார்களே அது ஒரு உருவமற்ற தொகுப்பு. அதன் சிறு பிரதிபலிப்புதான் தனி உருவற்ற திரளாய் அங்கு மோன நிலையில் சோம்பியிருப்பதுபோல் தோன்றியது அவனுக்கு உணர்வற்ற,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/11&oldid=841315" இலிருந்து மீள்விக்கப்பட்டது