பக்கம்:செவ்வானம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 H8 செவ்வானம் முடிகிறது. அதோ காரில் போகிறானே வீணன், அவனுக்கு என்ன தகுதியிருக்கிறது சகல சுக செளகரியங்களுடனும் வாழ்க்கை நடத்துவதற்கு? அவன் அருகிலே இருக்கிறார்களே பகட்டு வீணிகள் அவர்களுக்கு என்ன உரிமையிருக்கிறது மற்றவர்களை, அவர்களின் வாழ்க்கை முறைகளை, பழித்துக் காட்டுவதுபோல் படாடோபமாகத் திரிவதற்கு? யோக்கியமாக வாழ்க்கை நடத்த முயல்கிற குமுதம் அன்றாட அவசியத் தேவைகளைக்கூட அடையமுடியவில்ல. தங்கள் வாழ்க்கையைப் பாழாக்கி பிறர் வாழ்வையும் நாசமாக்கத்திட்டமிட்டு வாழும் இந்த நாசகாரிகள் நடத்துகிற ஆடம்பரப் பிழைப்பு குமுதம் போன்றவர்களின் மனதை மாற்றி அவர்களையும் பாழாகும்படி துண்டினால் வியப்பில்லை. இத்தகைய சூழ்நிலையிலும் குமுதம் தனது தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிக்கிறாளே அதுதான் வியந்து பாராட்டுவதற்குரிய பெரிய விஷயம். வாழ்க்கைப் போராட்டத்திலே கால வெள்ளம் இழுத்த இழுப்பில் சிக்கித் தன்னை இழந்து விடுகிறவர்களைப்பற்றி நினைப்பதற்கு என்ன இருக்கிறது? தன்னை இழக்காமல் போராடுகிறவர்களின் முயற்சி சிறந்தது. தன்னை இழக்காததுடன் போராடிப் போராடித் தனது தனித்துவத்தைப் பிறர் உணரும்படி வலியுறுத்தத் தவிக்கிறார்களே அவர்கள்தான் உண்மையான மனிதர்கள். மனிதத் தன்மை இந்த உலகத்திலிருந்து மங்கி மண்ணாகி விடவில்லை என்பதற்கு இவர்களைப் போன்ற வர்களின் வாழ்க்கைப் போராட்டம்தான் சரியான உதாரணம். இப்போரிலே இவர்கள் வெற்றி பெறாமல் போகலாம். எனினும் இவர்களது தோல்விகூட கெளரவமிக்கதேயாகும். எண்ணச்சுழலில் ஆழ்ந்திருந்த தாமோதரன் வீடு சேர்ந்ததும் எழுத்து வேலையில் ஈடுபட்டான். இரவில் வெகுநேரம் வரை எழுதிக் கொண்டிருந்தான். - காலையில் அவனால் எழுந்திருக்க இயலவில்லை. அசதி அதிகமிருந்தது உள்ளக் கொதிப்புடன் வாழ்ந்த அவன் உடலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/110&oldid=841317" இலிருந்து மீள்விக்கப்பட்டது