பக்கம்:செவ்வானம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 109 கொதித்தது இப்போது, தனக்குக் கடுமையான ஜூரம் வந்துவிட்டது என்பதை அவன் உணர்ந்தான். சரியான சமயங்களில் போதுமான அளவு சத்தான ஆகாரம் சாப்பிடாமலும், போதிய ஒய்வுமின்றி, மூளைக்கு மட்டுமே அதிக வேலை கொடுத்து வந்த தாமோதரனை எந்த நேரத்திலும் வியாதி பற்றிக் கொள்ளலாம் என்று அவன் நண்பர்கள் எதிர்பார்க்கா மலில்லை. எவ்வளவோ எச்சரித்தும் பயனில்லாமல் போயிற்று. காய்ச்சல் வந்த அன்று பூராவும் அவன் உணவு எதுவும் உட்கொள்ளவில்லை. மருந்து சாப்பிடவுமில்லை. அதற்குமுன் சில தினங்களாகவே தாமோதரனுக்குச் சரியான சாப்பாடு கிடைக்க வசதியில்லை. பொருளாதார மந்தம்தான் காரணம் அறிவைத் துணை கொண்டு, பிறர் அறிவை வளர்க்க உதவும் தொழிலைக் கலையாகவும் வாழ்க்கையாகவும் தேர்ந்து கொள்ளும் யாரும் அரைப்பட்டினி நிலையில்தான் வாழவேண்டும் என்கிற நியதி நீடிக்கிற சமுதாயத்திலே, தனித்துவம் பேசித்தான் நினைத்தபோக்கில் செயல்புரியத் துணிகிறவர்கள் முழுப்பட்டினி கிடக்க நேர்வது அபூர்வமல்ல, தினசரி நிகழ்ச்சிதான். தாமோதரனின் பொருள் நிலையுடன் அவனது அசிரத்தையும் சேர்ந்துதான் அவனுடைய தேகநலனுக்குக்கோளாறு விளைவித்தன. தேடிவந்த வியாதி தானாகவே ஓடிவிடும் என்ற நம்பிக்கை யிருந்தனால், அதைத் துரத்தியடிக்க அவன் எவ்வித முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. படுத்துக் கிடந்த இடத்தை விட்டு எழுந்து போகச் சோம்பல் என்பதுடன் கையில் காசு இல்லை என்பதும் முக்கியமான காரணமே, சும்மா விழுந்து கிடந்த அவனுக்கு காலம் அசைவதுபோல் தோன்றியது. அப்போது மாலை மணி ஆறரை. இருள் வெளியே ஆட்சி செலுத்துவதற்கு முன் அறையினுள் தன் சக்தியைப் பூரண மாகக் காட்டி விட்டது. உற்சாகமில்லாமல் புரண்டு கொண்டிருந்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/111&oldid=841319" இலிருந்து மீள்விக்கப்பட்டது