பக்கம்:செவ்வானம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 113 'தாமோதரனைப் போன்றவர்கள் சுலபமாக எழுதிவிடு கிறார்கள் - கெளரவமாக வாழ வழிகள் எத்தனையோ! துணியவேண்டும். பிறகு கவலையே கிடையாது. வேர்க்கடலை விற்றோ, விறகு வெட்டியோ, ஹோட்டலில் வேலை செய்தோ பிழைப்பு நடத்தி விடலாம். தெரு நடைமேடையிலே கைக்குட்டைக் கடை பரப்பி வியாபாரம் செய்கிறார்களே, அவர்கள் முகத்திலே படிந்துள்ள அலட்சிய பாவத்தைக் கவனித்தாயா? சமுதாயத்தின் போலி நாகரிகம், பகட்டான அந்தஸ்து, பொய்க் கெளரவம் இவைகளைத் துச்சமாக மதித்து நடுத்தெருவில் தலைநிமிர்ந்து நின்று சிறு பொருள் வியாபாரம் செய்யத் துணிந்தால்கூட எவனும் தன் வயிற்றுப் பாட்டிற்கு வகைசெய்து கொள்ள முடியும் - இம்மாதிரி எழுதிவிட்டார் தோழர் உபதேசிக்கிறவர்களுக்குக் குறைவா என்ன இவர் மாதிரி ஆசாமிகள் இப்படி வீண்வேலைகள் செய்வதைவிட உருப்படியாக உழைக்கட்டுமே, இதைச் சொன்னால் இவர்களுக்குக் கோபம் வந்துவிடும்.' ஒரு புத்தகத்தைப் படித்ததும் இவ்விதம் எண்ணினாள் அவள். நினைப்பு அவளுக்கே சிரிப்பு தந்தது. இதை அந்த அறிவுக் கொழுந்திடம் சொல்லவேண்டும். என்ன பதில் சொல்வார் என்று பார்க்கலாமே! என்ற நினைப்பு சிரிப்பை அதிகப்படுத்தியது. என்ன சொல்வான் தெரியாதா! அறிவற்ற இந்த சமுதாயத்திற்கு வழிகாட்ட என்னைப்போன்ற சிந்தனைச்சுடர்கள் தேவை. உங்களுக்கும் சேர்த்துச் சிந்தனை புரிந்து உயர்ந்த எண்ணங்களை உதிர்க்கும் நாங்கள் வேறு விஷயங்களைப்பற்றிக் கவலைப்பட முடியுமா? இப்படி ஏதாவது அளந்து வைப்பான் என்ற எண்ணமும் தொடர்ந்து பிறந்தது. தாமோதரன்மீது அவளுக்கு வெறுப்பு ஏற்படும். சில சமயம் அனுதாபம் பிறக்கும். அவனைப்பற்றி நினைப்பதே சில சமயம் அவளுக்கு இனிமையாக இருக்கும். ஆகவே அவள் உள்ளத்தின் தன்மையை அவளாலேயே முடிவுகட்ட இயலவில்லை. வீட்டில் செ. - 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/115&oldid=841323" இலிருந்து மீள்விக்கப்பட்டது