பக்கம்:செவ்வானம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 - செவ்வானம் முடங்கி எண்ணச் சுழலில் ஆழ்ந்து கிடந்தே வாழ்ந்துவிட முடியுமா என்ன? குமுதத்திற்கு வாழ்க்கைப் பிரச்னை நிரந்தரமாக அச்சுறுத்தி எதிர் நிற்கும் பெரிய விஷயமாயிற்றே! 'மறுபடியும் டீச்சராகலாமா? அல்லது எங்காவது டைப்பிஸ் டாகச் சேரலாமா? என்ன செய்யலாம்? அவளால் விடைகாண முடியவில்லை. அவள் மனக்குறளி குறும்பு பண்ணியது. தாமோதரன் எழுதியுள்ளபடி செய்யலாமே. வெறும் கைக்குட்டை விற்க வேண்டியதில்லை. ஹேராயில், பவுடர், ஸோப்பு, ஸ்ெண்டு முதலியவைகளையும் பைகளில் வைத்து எடுத்துக் கொண்டுபோய், வீடுதோறும் சென்று விற்றாலென்ன? இந்த எண்ணம் அவளுக்கு முதலில் நகைப்பு உண்டாக்கியது. ஆனால் எண்ண எண்ணத் துணிவே பிறந்தது. அவள் அவ்விதமே செய்தாள். ஒரு கிழவி ஸுட்கேஸில் குங்குமம், சீப்பு முதல் வாசனைத் திரவியங்கள், ரிப்பன், பட்டுக்கயிறு வரை சகல பொருள்களையும் சுமந்து தெருத்தெருவாக அலைந்து விற்பனை செய்து தனிவாழ்வு வாழ்வதைக் கண்ட குமுதத்தின் மனம் உறுதியடைந்தது. எண்ணிய படி செய்தாள். நல்ல வரவேற்பிருந்தது. ஆகவே ஒவ்வொரு தினத்தையும் ஒரு மாதிரியாக ஒட்டியடைக்க முடிந்தது. தனது வெற்றிகரமான முயற்சியைப்பற்றி தாமோதரன் அறியவேண்டும் என்ற ஆசை ஒடுக்கமுடியாததுடிப்பாக ஓங்கிவிடவே, அவள் அவன் வீட்டிற்குப் போனாள். தன்னை அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான் தனது திடீர் விஜயம் அவனுக்கு ஆச்சர்யம் அளிக்கும், அதைவிடவியப்புத்தரும் தனது வாழ்க்கைத் திட்டம் என்று நினைத்தாள் குமுதம், ஆனால் அவள் எதிர்பார்க்க முடியாத நிலையிலே அவன் காட்சி தரமுடியும் என அவள் எண்ணவேயில்லை. குமுதம் போனபொழுது அந்த வீடு அடைத்துக்கிடந்தது ஆனால் வெளியே பூட்டப்பெறவில்லை. அவள் கதவைத்தட்டினாள். திறக்கவில்லை. நல்ல தூக்கம் போலிருக்கிறது என்று நினைத்தபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/116&oldid=841324" இலிருந்து மீள்விக்கப்பட்டது