பக்கம்:செவ்வானம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. செவ்வானம் உயிரற்ற ஆனால் உணர்வும் உயிர்ப்பும் உள்ளார்ந்துகிடக்கிற ஒரு பெரிய மிருகப்பண்பு செயலற்று இருப்பது போல் தோன்றியது. அங்கே முனு முனுப்பு பிறந்தது. அசைவு. கிளர்ச்சி, உயிர்க்கனல் வெடித்தது திடீரென்று அருவமாய்க் கிடந்த ஒன்று விழித்தெழுந்து பூதாகாரமாய் முன்னின்று உறுமியதுபோல் ஓர் ஒலி சடசடத்தது. கரகோஷம், சிறு சிரிப்பு பிறந்தது ஒரு மூலையில் அர்த்தமற்ற பயம் ஒன்று தாமோதரன் இதயத்தைக் கல்வியது. துங்கிக்கிடந்த துஷ்ட மிருகத்தை உதைத்து எழுப்பி விட்டோமோ என்ற கலவரம். அவனுக்கு எண்ணம் ஒடவில்லை. உதடுகள் துடித்தன. பேசவேண்டும். பேசி முடிக்க வேண்டும். அவன் கத்தினான். 'எல்லாம் அர்த்தமற்றது என்று சொல்கிறேன். ஒரு சிலரின் சுயநல அஸ்திவாரத்தின்மீது எழுப்பப்படும் பகட்டு மாளிகைகள் இவை உங்களுக்கு இன்று கலை தேவையில்லை. கஞ்சாக்கவிதைகள் தேவையில்லை. நீங்கள் வாழ்வில் வஞ்சிக்கப்பட்டிருப்பதை நீங்கள் உணரக்கூடாது என்று விரும்புகிறவர்கள் உங்களுக்கு போதை தரும் லாகிரிகளாகப் பயன்படுத்தும் சரக்குகள் அவை. சிலையும் ஓவியமும் நாடகமும் சினிமாவும் போதைப் பொருள்களேதான் இன்றைய நிலையிலே இன்று இதோ ஒரு கலாமண்டபத்தைத் திறந்து விட்டார்கள் உண்மையில் இது உங்கள் ரத்தத்தை உறிஞ்சப் போகிற, உங்கள் உழைப்பின் பயனைச் சுரண்டப் போகிற காளான் மாளிகைதான். இதிலே கொட்டிய பணத்தை எண்ணற்ற வீடுகள் கட்டப் பயன்படுத்தியிருக்கலாம். இங்கே வீணாக்குகிற மின் சக்தியால் எண்ணிலா வீடுகளிலே ஒளிபுகுத்த வசதி செய்திருக்கலாம்.' இருட்டிலே கிடந்த தாமோதரன் பெருமூச்செறிந்தான். அந்தக் கூட்டத்திலிருந்து அவன் உயிரோடு தப்பிவந்தது பெரும்பாடாயிற்று. அன்றுதான் கந்தர்வகலாமண்டபம் திறப்பு விழா. இனி அங்கு நாட்டியம் கூத்தாடும். சங்கீதம் ஆட்சி செய்யும். நாடகம் ஆடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/12&oldid=841328" இலிருந்து மீள்விக்கப்பட்டது