பக்கம்:செவ்வானம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 1j9 செய்வதிலே திருப்தி அடைந்தாள் அவள் என்பது அவளது ஒவ்வொரு செயலிலும் நன்கு வெளியாயிற்று. தன்னால் எதுவும் ஆகாமல் பிறரது தயவை நம்பிக்கிடக்கிற குழந்தைக்குத் தேவையானவற்றைப் பரிவுடன் வெகு சிரத்தையாகக் கவனித்துச் செய்வதிலே மகிழ்வுறும் தாய்மை ஒவ்வொரு பெண்ணின் பண்பாகவும் திகழ்கிறது. குழந்தையிடம் மட்டுமின்றி. ஆதரவற்ற நிலையில் கிடக்கும் பெரியவர்களுக்கும் உபசரித்துப் பணிபுரிவதிலே பெண்மை பெருமையும் பெருமகிழ்வும் அடைகிறது. இது குமுதத்தின் செயல்களிலும் பளிச்சிட்டது. 'இவள் ஏன் இப்படி எனக்கு உதவி புரியவேண்டும்? இவளைச் சாகாமல் தடுத்து நிறுத்தியதற்கு நன்றியறிதலாக இருக்குமோ! இல்லையெனில், யாரென்றே நன்கு அறிந்து கொள்ளாத என்னிடம் இவள் இவ்வளவு அன்பு காட்டுவானேன்? தன்னிடம் அன்போ இரக்கமோ காட்டத் துணியாத ஒருவனுக்கு இவ்வளவு துரம் உதவி புரிவானேன்? எரிந்து விழுந்த என்னை இவளாகவே தேடிவந்து தானாகவே பாதுகாப்புகள் செய்வதேனோ? என்னால் இவளுக்கு ஏதாவது நன்மை கிடைக்குமென்று எண்ணுகிறாளா? என்னிடம் அனுதாபத்தையும் பாராட்டுதலையும் தவிர வேறு எதையும் எதிர்பார்த்துப் பயனில்லை என்று இவளே அன்றொருநாள் சொன்னாளே. பின் இவளது விசித்திரப் போக்கின் அர்த்தம் தானென்ன? தாமோதரனின் உள்ளம் வழக்கம்போல் முடிவிலாக் கேள்விகள் அலைபாயும் இடமாயிற்று. குமுதத்திடமே கேட்டுவிடலாம் என்று நினைப்பான். தயக்கம் அதற்குத் தடைவிதிக்கும். 'பெண்ணின் அன்பான உபசரிப்பு இனிமை நிறைக்கிறது உள்ளத்திலே; அவள் அருகேயிருந்தாலும், எதிரே நின்றாலும், சூழ்நிலையில் சுற்றிக் கொண்டிருந்தாலும் குளுமை உண்டாகிறது. பெண்ணின் துணையையும் அன்பையும் பெறமுடியாத ஆணின் வாழ்க்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/121&oldid=841330" இலிருந்து மீள்விக்கப்பட்டது