பக்கம்:செவ்வானம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 121 வளர்த்தது. அவள் அன்பும் உபசரிப்பும் அவளிடம் உரிமையுடன் பேசத் தெம்பு கொடுத்தன அவனுக்கு. அதில் இனிமை கண்டதால் அவளும் அதை ஆட்சேபிக்கவில்லை. அவன் அவ்விதம் தாராளமாகப் பேசவேண்டும் என்று அவளாகவே விரும்பினாள் என்றுகூடத் தோன்றியது. சில சமயங்களில் அவள் தாமோதரன் எழுதி வைத்திருந்த வற்றை எடுத்துப் படித்துப் பொழுது போக்குவாள் அவன் படிக்கும்படி கூறிய குறிப்புத்தாள்களைப் படித்தவண்ணம் நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்து விடுவாள். அவனாக'என்ன, இன்று பிசினஸ் விடுமுறையோ? என்று கேட்கவும், மோகனப் புன்னகை சிதறியவாறு செல்வாள். அவனைப்பற்றி அவள் அதிகம் அறிந்துகொள்ள முடிந்தது. வேதனையுற்ற தனது உள்ளத்திற்கு சோகரத்தம் சிந்துகிற அவனது இதயத்தின் தணியாத ஆவேச ஒலி குளுமைதரும் அருமருந்தாகத் திகழ்வதை அவள் உணர்ந்தாள். தாமோதரன் எனக்கு எவ்வித உதவியும் செய்ய இயலாமற் போகலாம்; எனினும் அவருடைய எண்ணங்கள் எனக்கு ஆறுதல் தருகின்றன. வாழ்க்கையில் புதிய உற்சாகம் புகுத்துகின்றன என்று நினைத்தாள் அவள். ஏங்கும் மனித இதயம் ஏக்க எதிரொலி கொடுக்கும் சகஹிருதயத்தை நாடித் தவிக்கிறது. குமுதத்தின் உள்ளம் தாமோதரனின் உள்ளத் துடிப்புகளில் தெம்பு கண்டது. 23 தாமோதரன் எண்ணங்களினால் மன அமைதி பெற்ற குமுதம் அவனிடம் பேசுவதில், அவன் பேச்சுக்களைப் கேட்பதில், மட்டற்ற மகிழ்ச்சி பெற்றாள். தனிமையில் அவற்றை எண்ணி எண்ணி அளவிலா இன்பம் அடைய முடிந்தது அவளால். 'நீங்கள் என்னைக் காப்பாற்றியிராவிட்டால், அன்றே நான் செத்திருப்பேன். எனக்கு அதற்குத் துணிவில்லாமல்போய் நானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/123&oldid=841332" இலிருந்து மீள்விக்கப்பட்டது