பக்கம்:செவ்வானம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 125 அலறலும் ஒப்பாரியும் நிலவுகிறபோதே, படாதிபதிகள் ரகரகமான துணிகளை நாசமாக்குகிறார்கள், படத்திற்குப் பலப்பலவித ஆடைகள் தயாரித்து. காட்சிக்குக் காட்சி மாறுதல் காட்டுவதற்கென்று எவ்வளவோ உடை அலங்காரங்கள். ஒரு படத்தில் உபயோகமான உடை தினுசுகள் அடுத்தப் படத்திற்குப் பயன்படுவதில்லை. அத்தனையும் வீண்தானே? உற்பத்தியைப் பெருக்குங்கள், சுயதேவையைப் பூர்த்தி செய்ய உழையுங்கள் என்று பேசப்படுகிற காலத்திலேயே, எண்ணற்றோர் சோம்பல் வாழ்வும் உல்லாசப் பிழைப்புமே வாழத் துணிகிறார்கள். பயனற்ற, தேவையற்ற உழைப்புகளிலே காலத்தையும் சக்தியையும் விராயமாக்குகிறவர்களின் தொகைதான் அதிகரித்து வருகிறது. சமூகத்திலே பாதிப்பேர் உருப்படியான காரியம் எதுவும் செய்யவில்லை. அதிகமாக உழைப்பதாகச் சொல்கிறவர்களில் பெரும்பகுதியினர் வெளிச்சமிடும் வீணத்தனங்களிலே கவைக்குத வாத் திருப்பணிகளிலே, தேவையற்ற காரியங்களிலேதான் உழைப்பைக் கொட்டுகிறார்கள். இவர்கள் செய்கிற செயல்களினால் தனி மனிதருக்கோ, சமுதாயத்திற்கோ, நாட்டிற்கோ எள்ளளவு நன்மையுல்லை. தீமைகளுக்கோ குறைவில்லை. நாட்டிலே பஞ்சநிலை பரவியுள்ளபோது, மக்களின் வாழ்விலே வறட்சி வேரூன்றி நன்கு வளர்ந்து ஓங்குகிறபோது, கவலையும் பயமும் மக்களை விழுங்கிக் கொழுக்க முயல்கிறபோது, கலைவிழா என்ன வாழ்கிறது? நாடகம், சங்கீதம், சினிமா, நாட்டியங்களால் - இவற்றைப் பாதுகாப்பதாக வெளிச்சம் போடும் வீணத்தன முயற்சிகளினால் - என்ன பயன் என்று கேட்கிறேன். இவர்களினால், இவர்களது செயல்களினால் மக்களுக்கு ஒரு சிறிது நன்மையேனும் உண்டா என்று கேட்கிறேன். கலைப்பூசாரிகளாக மாறிவிடும் சுயநலமிகளுக்கு லாபம் இருக்கிறது. அவர்கள் பணத்தோடு பணம் சேர்க்க முடிகிறது. ராஜபோக வாழ்வு வாழ முடிகிறது. உல்லாச பவனங்கள், பகட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/127&oldid=841336" இலிருந்து மீள்விக்கப்பட்டது