பக்கம்:செவ்வானம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் | 1 அசையும். சினிமாகூட நிழலாட்டம் போடும் ஓவியம் கொலு விருக்கும், விசேஷக் கண்காட்சிகளாக அனைத்திற்கும் பயன்படக்கூடிய புதுரகக் கலாமண்டபம் அது. அதை நிர்மாணித்த செல்வரைப் பாராட்டினார்கள் புகழ் பாடினார்கள். அரசியல் பிரமுகரான அவரே வரும் தேர்தலில் நாட்டின் தந்தையாக வெற்றி பெறவேண்டும் என வாழ்த்தினார்கள் எத்தனையோ பேர் புகழ்ந்தார்கள். அங்கு இருந்த அவனையும் பேசச் சொன்னார்கள். அவன் பேசினான். அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. எப்படிப் பிடிக்கும்? உண்மை என்றாவது சம்பந்தப் பட்டவர்களின் வரவேற்பைப் பெற்றது உண்டா? தாமோதரன் இருண்ட அறையில் இருந்தான். கூட்டம் முடிந்து வந்ததிலிருந்து அவனுக்கு உறக்கமே வரவில்லை. அவன் எண்னக் கொதிப்பு அடங்கவேயில்லை. படிக்கலாமென்று எண்ணினான். ஓடவில்லை. அத்துடன் விளக்கிலே எண்ணெயுமில்லை என்று புரிந்தது. பின் ஒளி அணைந்தே விட்டது. அவன் மனஉளைச்சல்தான் ஒடுங்கவில்லை. மணி மூன்றிருக்கும். குளிர் உருவமற்ற பூச்சிபோல் ஊர்ந்து வந்தது. எங்கும் நெளிந்தது. அதன் ஸ்பரிசம் பெற்று அவன் உடல் சிலிர்த்தது. அவன் உள்ளம்கூடச் சிலிர்த்தது, வெளியே கேட்ட அரவத்தினால் சரட்...சர்.சரட் மெதுவாக நடக்கும் காலடி ஓசை, சரசரப்பு, மெளனம், மீண்டும் ஒசை, அது யாராக இருக்க முடியும்? அவன் இதயத் துடிப்பு அதிகரித்தது. 2. இருளில் தனி அறையில் துக்கம் வராமல், பலவாறு எண்ணிக் கொண்டிருந்த தாமோதரன் காதுகள் வெளியே எழுந்த காலடி ஒசையைத் தெளிவாகக் கேட்டன. அவனது எண்ணக் குழப்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/13&oldid=841339" இலிருந்து மீள்விக்கப்பட்டது