பக்கம்:செவ்வானம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 1 : 3 சிவசைலத்தின் பதில் முதலாளிக்கு திருப்தியளித்தது அதுதான் சரி. அப்படித்தான் செய்யனும், சட்டுப்புட்டென்று தீர்த்துக் கட்டுங்கள் என்று ஆரவாரமாக ஆமோதித்தார். சிவசைலம் சுலபமாகச் சொல்லிவிட்டார். ஆனால் என்ன செய்வது. எப்படிச் செய்து முடிப்பது? முடிவு தெரியாத பிரச்னைகளாகத்தான் சிரமப்படுத்தின. இவை. ‘இவன் ஏன் இப்படி அலைகிறான் சனியன் மாதிரி எவன் எப்படி வாழ்ந்தால் இவனுக்கு என்னவாம்? வேண்டுமானால் இவனும் எவளையாவது இழுத்துக் கொண்டு திரியட்டுமே யாரும் வேண்டாமென்றா தடுத்தார்கள் என்று சினந்தது அவர் உள்ளம். அவர் குமுதத்தைப் பற்றி எண்ணினார். தலையைச் சொரிந்தார். அவர் கண்களில் ஒளி தெறித்தது சிரித்தார். சிவசைலம் தானாகவே சிரித்துக் கொண்டார். 'எந்தவிதமான தீர்மானத்திற்கும் வருவதற்கு முன்னர் அந்தப் பெண்ணைச்சந்தித்துப் பேசினால் நல்லது என்று அவர் அந்தராத்மா உபதேசம் புரிந்தது. வழக்கம் போல் செய்தால் போச்சு என்று ஒத்தி போட்டுவிட்டு அவர் வேறு அலுவல்களில் இறங்கிவிடவில்லை. உடனேயே கிளம்பினார், குமுதத்தைக்கண்டு பேசுவதற்காக 25 குமுதத்திற்குத் தன் மனதையே சரியாக எடை.போ. முடியவில்லை. தனது துடிப்புகளின் தன்மையை நிர்ணயிக்கத் தெரியவில்லை. திடீரென்று அவள் தீாமானித்தாள் இனி தாமோதரன் இருக்கும் இடம் தேடிப்போகக்கூடாது என்று. அவரே தேடி வரவேண்டுமாக்கும்? அதற்கு விலாசம் கூட அறிவிக்கவில்லையே! என்று குறும்புத்தனம் செய்தது மனம் இளநகை பூத்த முகம் எழில் நிறைந்து விளங்குகிறது என்று பாராட்ட எதிரே யாரும் இல்லை. செ. - 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/131&oldid=841341" இலிருந்து மீள்விக்கப்பட்டது