பக்கம்:செவ்வானம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 32 செவ்வானம் எதிர்பாராவேளையிலே சிவசைலம் வந்து சேரவும் குமுதம் திடுக்கிட்டாள் அப்பொழுது அவள் தாமோதரனின் புதிய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். கொதி நிலையிலிருந்த அவள் உள்ளம் அவனது எண்ணங்களை ஆமோதித்துப் பாராட்டினாலும், அவளுக்கு வருத்தமே மிகுந்திருந்தது. இவர் ஏன் தான் இப்படியெல்லாம் எழுதுகிறாரோ தெரியவில்லை. அநாவசிய மாக எல்லோரது வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதித்துக் கொண்டு, என்று முனங்கியது அவள் மனம், இதைப் பற்றி அவரிடம் குறிப்பிட வேண்டும் என நினைத்த அவள் மனம் சிந்தித்தது என்ன சொல்வார் தெரியாதா - லெல்லாம் யாரையும் சீர்திருத்திவிடலாம் என்ற நம்பிக்கை னக்கு இல்லை, என்றாலும் என்னைப் பாராட்டுகிறவர்கள் தான் அதிகமில்லையே வசைபாடுகிறவர்கள் தொகையாவது வளரட்டும் எனும் நல்லெண்ணத்தினால்தான் இப்படி எழுதியிருக்கிறேன். இந்த இந்த எண்ணம் அவள்முகத்தில் இளநகை பூக்கும்படி செய்தது. அவ்வேளையில்தான் சிவசைலம் வந்து சேர்ந்தார். அவரை எப்படி வரவேற்பது. அவரிடம் என்ன பேசுவது என்ற குழப்பம் ஏற்பட்டது அவளுக்கு. இவர் ஏன் இங்கு வரவேண்டும்? எதற்காக வந்திருக்கிறார்? என்னைத் தேடிவரவேண்டிய காரணமென்ன? - ஒரே விடையைப் பெறக்கூடிய பல கேள்விகளை எழுப்பியது அவள் உள்ளம். அவள் குழப்பத்தைத் கவனித்தும் கவனியாதவர்போல் நடந்து கொண்டார் சிவசைலம். தான் செல்வச் சூழ்நிலைகளிலேயே வசித்தாலும் கூட, எந்த இடத்திற்கும் தகுந்தபடி அனுசரித்துப்போகக் கூடியவர் என்பதை நிரூபிப்பதுபோல் அவர் முகம் சுளிக்காமல், வேண்டாத விமர்சனக் குறிப்பு உதிர்க்காமல், சந்தோஷ உணர்வு காட்டித் தரையிலேயே உட்கார்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/134&oldid=841344" இலிருந்து மீள்விக்கப்பட்டது