பக்கம்:செவ்வானம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ! 3% 'அதெல்லாம் ஒரு மண்ணுமில்லை. அவர் எழுதியவற்றை நான் படிக்கணும் என்று சொல்வதேயில்லை. படித்துப் பார்த்தாயா, எப்படியிருக்கு என்று கேட்பதுமில்லை. எழுதுவது தான் என் வாழ்க்கை. மற்றவர்கள் ஏற்றுக் கொண்டால் என்ன, கவனிக்காமல் ஒதுக்கிவிட்டால்தானென்ன என்ற மனோபாவம் அவருக்கு உண்டு உண்மையைச் சொல்ல வேண்டும் எனும் ஆர்வத்தால் மடமட வென்று பேசினாள் அவள். அவளது உள்ளத் துடிப்பில் பச்சைத் தண்ணீரை அள்ளிக் கொட்டியது போல் விழுந்தது சிவசைலத்தின் பேச்சு. ஒ அப்படியா அவன் கிடக்கிறான் பிழைக்கத் தெரியாத முட்டாள் என்று அழுத்தமாகச் சொன்னார் அவர் மேலும் அவள் பேசுவதற்கு முன்னரே தனது பிரசங்கத்தை ஆரம்பித்து விட்டார். 'குமுதம், நீயேனம்மா இப்படி அலையவேண்டும்? உன்னைப் பற்றிப் பலபேரு பலமாதிரியாகப் பேசுறது என் காதில் வந்து விழுந்தது. நீயோ படித்த பெண். அழகுபோலே டீச்சர் வேலை பார்ப்பதை விட்டுவிட்டு, தெருத்தெருவாக அலைந்து வியாபாரம் செய்வது நல்லாயிருக்குதா? நீ நினைக்கலாம் - இவனுக்கென்ன? நான் எப்படியும் நாசமாப்போறேன் அப்படீன்னு. எப்பவுமே நல்லவங்க வீணாக் கெட்டுப்போவதை நான் விரும்புவதில்லை. என்னாலான வரை நல்லவர்களுக்கு உதவி செய்ய நான் தயங்கமாட்டேன். நீ நல்ல பெண். வாழவேண்டிய வயது. நீயாக உன் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்வானேன்? அந்தஸ்கூல் மேனேஜர் ரொம்பச் சொன்னார். உன் குணத்தையும் திறமையையும் பாராட்டிப் பேசினார். நீயாக வேலையை உதறிவிட்டு வந்துவிட்டாயாமே. செச் சேச்சே, அப்படிச் செய்யலாமா? குமுதம், நீயே யோசிச்சுப்பாரு. இதுமாதிரி எத்தனை காலம் வாழ்ந்து விட முடியும்? அவள் பதிலை எதிர்பார்ப்பதுபோல் குமுதத்தின் முகத்தைப் பார்த்தார் அவர் தலைகுனிந்து தரையையே பார்த்தபடி உட்கார்ந் திருந்த அவளது மனம் எண்ணக் காற்றாடியை எங்கெங்கோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/137&oldid=841347" இலிருந்து மீள்விக்கப்பட்டது