பக்கம்:செவ்வானம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 2 செவ்வாணம் அதிகரித்தது. அங்கே அந்நேரத்தில் இரவு மூன்று மணிக்கு - சர்வ ஜாக்கிரதையோடு அசைவதுபோல் நின்று நின்று நடப்பது தனக்கு 露 ங்க செல் எண்ணினான் அவன். அவன் அப்படி நினைக்க இடமுண்டு. பொதுவாகவே தாமோதரன் பேரில் அநாவசியமான வெறுப்பு ஏற்பட்டிருந்தது அந்த வட்டாரத்தில், காரணமென்று எதையும் தனியாகக் குறிப்பிட ஒடியாது வேண்டாதவர்கள் நோக்கிலே அவனுடைய ஒவ்வொரு ால்லும் எல்லாச் செயல்களும் விரோதமானவையாகவே செ தென்படும். திட்டமில்லாவிடிலும், அர்த்தமில்லையெனினும், காரண காரியத் தொடர்புகளின் விளக்கம் புரியாமல் போயினும், அப்பனும் பாட்டனும் முன்னுள்ளோரும் செய்து வந்தவை என்பதற்காகவே எத்தனையோ பண்புகளை விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருப்ப வர்களே நிறைந்துள்ள மனித வர்க்கத்திலே சுயமாகச் சிந்தித்து தன் இஷ்டம் போல் செயல் புரிகிறவர்கள் வெறுப்புக்கு ஆளாக னடியவர்கள்தான். s 17 பலர் கவனத்தையும் கவரும்படி காரியங்கள் செய்கிறவன் சுலபமாகப் பிறரது வெறுப்பு போட்டி, பொறாமைகளுக்கும் இலக்காகக் கூடியவன்தான். தங்களைவிட்டு விலகிப் போகிறவன் உயர்ந்து விட்டால் பக்தி பண்ணி பஜனை பாடிக் கும்பிடத் தயாராக இருக்கிற மனித சமுதாயம், அவன் கொஞ்சம் தவறினாலும் அவனைக் கீழே இழுத்துத் தள்ளி அடியோடு அமுக்கி மிதித்து நாசமாக்கிவிடக் காத்திருக்கிறது. சமுதாயம் வெறி மிருகம்தான். தாமோதரன் மிகவும் உயர்வு எய்திவிட்டவனல்ல. சாதாரண மனிதன் சாதாரண மனிதர்களிடையிலே ஒரு தனியன். தனக்கெனத் தனிக் கொள்கைகள் வகுத்துக் கொண்டவன். விசித்திரப் பிறவி என்றுதான் தோன்றும் அவனைக் கவனிக்கிறவர்களுக்கு எதைப் பற்றியும் தனக்குச்சரியென்று தோன்றியதைத் தயங்காமல் சொல்லும் துணிவை வளர்த்து வாழ்கிறவன் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/14&oldid=841350" இலிருந்து மீள்விக்கப்பட்டது