பக்கம்:செவ்வானம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 143 சம்பிராதாயங்கள் எல்லாம் எதற்கு? மன ஒற்றுமைதானே வேண்டும்: நீங்களும் குமுதமும் இல்லையா? என்று குத்தலாகச் சொல்லு திர்ப்பார்கள். அவன் திகைப்பு நீங்கிப் பதில் கூறுவதற்குள் அவர்கள் பிரமாதமான காரியத்தைச் சாதித்து விட்டவர்கள்போல் வீரநடை நடப்பார்கள். பரஸ்பரம் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு விஷச் சிரிப்பு தீட்டியபடி போய்விடுவார்கள். இவை அவர்களாக ஊகித்ததன் விளைவுகளாக இருக்கலாம் என்றுதான் எண்ணினான் அவன். இவற்றின் பின்னால் விஷவேலை பதுங்கியுள்ளது என்பது அவனுக்கு மெதுவாகத்தான் புரிந்தது திடீரென்று அவனுக்கு ஒரு மொட்டைக் கடுதாசி வந்தது. அவனையும் குமுதாவையும் பற்றிக்கேவலமாக எழுதப்பட்டிருந்தது அதில். அதைக்கண்டு புழுங்கினான் அவன். மறுநாள் காலையில் தெரு மூலையில் கும்பல் கூடி நின்று எதையோ சுவையாகக் கவனிப்பதைக் கண்டு தாமோதரனும் போனான். கும்பலில் கலகலப்பு ஏற்பட்டது. குத்தும் சிரிப்பும் அர்த்தம் நிறைந்த பார்வையும் நீந்தின அங்கே விலகி நில்லுங்கப்பா ஐயா படிக்கட்டும். அவங்க அவசியம் படிக்க வேண்டிய விஷயமாக்சே! என்று எவனோ கூறினான். பெருஞ்சிரிப்பு வெடித்தது அதைத் தொடர்ந்து. தாமோதரன் பார்த்தான். தன்னையும் குமுதத்தையும் பற்றி மட்டரகமான பாஷையில் எழுதப்பட்டிருந்த ஒர் அறிக்கை அது என்று கண்டதும் அவனுக்குக் கோபமும் ஆத்திரமும் பொங்கின. சுவரில் ஒட்டப்பெற்றிருந்த தாளைக் கிழித்துத் துண்டுதுண்டாக்கி வீசினான். வீணர்கள் என்று முனங்கியது அவன் வாய். அட, எவ்வளவு கோபம்டா உள்ளதைச் சொன்னால் உடம்பெரிச்சல்தானே! 'காதலி குமுதத்திற்கு காதல் கடிதத்துடன் இதையும் சேர்த்துவைத்து அனுப்புவதுதானே! இவ்விதம் பல பேச்சுகள் தெறித்தன கும்பலில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/145&oldid=841356" இலிருந்து மீள்விக்கப்பட்டது