பக்கம்:செவ்வானம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 செவ்வானம் அவன் சீறினான்: ‘உளறாதீர்கள்! எந்த மடையனோ வேண்டுமென்று செய்தது இது எல்லாம் பொய்! தாமோதரனின் கத்துதலை அமுக்கிவிட்டது கும்பலின் கூச்சல், ாருவர் ஒன்றைச் சொல்ல, சந்தை இரைச்சல் மாதிரி எல்லாம் க் கலந்து ஒலித்ததே தவிர எதுவும் தெளிவாகக் கேட்கவில்லை. ஒலி ஆரவாரத்தில் சிறிது இறக்கம் ஏற்பட்டபோது இது மட்டும் தாமோதரன் காதில் விழுந்தது. நீ பெரிய அரிச்சந்திர அவதாரம் மற்றவங்க சொல்றது பொய். இல்லையா? மடையன்' உணர்ச்சி வெறித்தனம் பெற்றுக் கூத்தாடிய அந்த இடத்திலே வறி உணர்ச்சி பாயும் உதைகளாகி அவனைப் பதம் போகவேண்டும் என்ற எண்ணம் எழவில்லை அவனுக்கு ஆள் ாட்டம் அதிமில்லாத தெருக்களின் வழியே சுற்றித் திரிந்தான். தன்னை அறிந்தவர்கள் பார்வையில் படக்கூடாது என்ற எண்ணத்துடன் அலைந்த அவன் உள்ளத்திலே பலவித நினைவுகள் அலைமோதிக் கொண்டிருந்தன. இது யார் வேலையாக இருக்கும்? முதன்முதலில் அதிகாலையிலே தற்கொலை செய்துகொள்ள வந்த குமுதத்தைத் தடுத்து நிறுத்தி அவளுடன் பேசிக்கொண்டிருந்தபோது பதுங்கி நின்று பின் சின்னத் தனமாகச் சொல்லெறிந்த கயவர்கள் வேலையாகத் தானிருக்க வேண்டும் என்ற நினைப்பு எழுந்தது. தான் நாவலித்த போது தன்முன் வரத் திராணியற்றுப்போன வீணர்கள் இத்தனை நாட்கள் பம்மிக் கிடந்ததேன்? அன்று எச்சரிக்கைச்சீட்டு அனுப்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/146&oldid=841357" இலிருந்து மீள்விக்கப்பட்டது