பக்கம்:செவ்வானம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 147 'அது உண்மையான காரணமாக இராது என்னைப்பற்றி ரொம்பவும் பேச்சு அடிபடுகிறதே என்ன விஷயம் என்று பார்த்துவிட்டு வரலாமே என்று எண்ணியிருப்பாய் இல்லையா? என்றான் தாமோதரன். நண்பன் பதில் சொல்லவில்லை. கொஞ்சநேர மெளனத்திற்குப் பிறகு ரகுராமன் சொன்னான். 'உனது புதிய புத்தகத்தைப் படித்தேன். அது வீணாகப் பல பெரிய மனிதர்களின் கோபத்தைச் சம்பாதிக்கப்போகிறது "எவன் பெரிய மனிதன்? பருத்த பணப்பையும் பெருத்த தொந்தியும் பூதஉருவும் பெற்றுவிட்ட சிறுமதியினரை, சிறுமைச் செயலினரை, சின்னத்தனப் பண்பினரைப் பெரிய மனிதர்கள் என்று குறிப்பிடாதே என் முன்னால்' என்று சீறினான் தாமோதரன். 'நீ சொல்வது சரியாக இருக்கலாம் அப்பனே, ஆனால் என் பேச்சு எங்கே எடுபடப் போகிறது எலும்புத்துண்டு கிடைக்காத நாய் மாதிரிக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறான். இவனுக்குப் பணம் கிடைக்காததனாலே ஏசுகிறான். பொறாமைப் பிண்டம் என்றுதான் சொல்வார்கள்.' 莺 நண்பனின் கருத்தைக் கேட்டுச் சிரித்தான் தாமோதரன். அதுமட்டும்தானா சொல்வார்கள். இல்லாததையெல்லாம் சிருஷ்டித்து அனைவரும் நம்பும்படி ஜோடனைவேலைகள் செய்து வம்புகளைப் பரப்புவார்கள். அவர்கள் என்னதான் செய்ய மாட்டார்கள்? 'இல்லாததை அடிப்படையாக்கி அற்புதங்கள் செய்துவிட முடியாது. கொஞ்சமாவது உண்மை இல்லாமலா போகும் அவர்கள் பேச்சிலே! 'அப்படியானால் குமுகத்தை நான்தான் கெடுத்தேன்; நல்ல வேலை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு ஆசைகாட்டி அவளைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/149&oldid=841360" இலிருந்து மீள்விக்கப்பட்டது