பக்கம்:செவ்வானம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 48 செவ்வானம் தெருப் பிச்சைக்காரியாக மாற்றியது நான்தான் என்று நீயும் நம்புகிறாயாக்கும்? சீற்றம் நிறைந்திருந்தது அவன் குரலிலே, 'இல்லை. ஆனால் குமுதம் உன்னைச் சந்திக்க அடிக்கடி வீடுதேடி வந்ததும், நினைத்த நேரங்களிலெல்லாம் அங்கு தங்கியிருந்ததும் உண்மைதானோ? ஒரு யுவதி ஒரு இளைஞன் அறையிலே சதா காட்சியளித்தால், அவனுக்கு உபசாரங்கள் செய்தால், சிரித்துப்பேசி இருவரும் தங்களையே மறந்த படியிருந்தால் காண்கிறவர்கள் சந்தேகிக்காமல் சந்தோஷப்படு வார்களா அப்பனே' என்று நண்பன் பேசியது அவன் இதய வேதனையைக் கிளறியது. அவன் பேசவில்லை. "தாமோதரா உனது நோக்கிலே எல்லாம் உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் நீயும் நானும் உனது குமுதமும் வாழ்வது நீ கனவு காண்கிற லட்சிய பூமி இல்லையே! சின்ன மனிதர்கள் நிறைந்த இடம்தானே ஆண்கள் பலர் நண்பர்களாகப் பேசி மகிழவில்லையா? பெண்களோடு பெண்கள் சகஜமாகப் பேசி நட்புக்கொள்ள வில்லையா? அப்படியானால் ஆணும் பெண்ணும் நண்பர்களாகப் பழகினால் அதில் என்ன தவறு என்று கேட்கலாம். ஆனால் எல்லோரும் தாமோதரன்கள் இல்லையே! அவர்கள் இஷ்டம்போல் பேசத்தான் செய்வர். அதைப்பரப்பவும் செய்வார்கள். ஊருடன் ஒத்துவாழத் தெரியாத நீஉன்செயல்களால் விளைகிறவற்றைக்கண்டு சீறி மற்றவர்கள் மீது குறை கூறுவானேன்? நண்பனின் பிரசங்கத்தைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தான் தாமோதரன் ஏதேனும் பதில் சொல்லவேண்டும் என்ற எழுச்சியே பிறக்கவில்லை அவனுக்கு அவனது மோனநிலை ரகுராமனுக்குக்கூட ஆச்சரியமாகயிருந்தது. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாதே பிரதர். நான் சொல்வதைக் கேளு பேசாமல் நீ அந்தக் குமுதத்தைக் கல்யாணம் செய்துகொள். என்ன நான் சொல்வது? என்றான் ரகுராமன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/150&oldid=841362" இலிருந்து மீள்விக்கப்பட்டது