பக்கம்:செவ்வானம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் Í á $ தாமோதரன் எரிந்து விழுந்தான் வாயை மூடுடா, ஒயாமல் தொணதொணன்னு கொசு இறைகிற மாதிரி' என்று. ரகுராமன் அப்புறம் பேசவில்லை. தாமோதரன் துங்கு கிறவன்போல் கிடந்தான். ஆனால் அவனுக்குத்துக்கம் வரவில்லை என்ன செய்யலாம்; இந்த ஊரிலேயே இருப்பதா அல்லது காஞ்சகாலம் எங்காவது சுற்றுப்பிரயாணம் போய்வரலாமா? இங்கிருந்தாலும் வெளியூர் போனாலும் குமுதத்தின் பெயர் வீணாக அடிபடத்தான் செய்யும், அதற்கு நான் என்ன செய்யமுடியும்? அவள் ஏன் என் வாழ்விலே குறுக்கிடவேண்டும்? அவளை நான் ஏன் அன்றிரவு சந்திக்க நேர்ந்தது? செத்துத்தொலைய வந்தவள் அந்தக் கிணற்றைத் தேடித்தானா வரவேண்டும்? வேறு எங்காவதுபோய் நாசமாயிருக்கக் கூடாதா? போகிறது வந்தாள். சாகாமல் தடுத்தேன். அப்படியே தொலைந்து போயிருக்கலாமல்லவா? அவ்ஸ் ஏன் சனியன் மாதிரித் திரும்ப திரும்ப வரவேண்டும்? சந்தர்ப்பங்கள் சதிசெய்துவிட்டன. சந்தர்ப்பம் என்ன செய்யும்? மனிதர்களின் முட்டாள்தனத்திற்கு சந்தர்ப்பத்தைக் குறைகூறி என்ன பிரயோசனம்? யார் எக்கேடு கெட்டால் இந்த ஊர்க்காரர்களுக்கென்ன? இந்த ரகுராமன் - போறான். அவனும் மனிதன்தானே' ‘ෆ வெறிவேகத்திலே புலம்பிய மனக்குறளி திடீரென்று சிரித்தது 'யார் எக்கேடு கெட்டால் இவர்களுக்கென்ன என்று சொல்கிறேன். இந்த உயர்ந்த தத்துவத்தை ஆதியிலேயே நான் அனுஷ்டித்திருந்தால் தொல்லை எதுவுமே ஏற்பட்டிராதல்லவா! ஊர், சமூகம், முதலாளிகள், அவர்தம் செல்லப்பிள்ளைகள், அபிமான ரதிகள், வீணர்கள் வெளிச்சங்கள் எல்லோரும் எக்கேடும்கெட்டுக் குட்டிச் சுவராகட்டும் என்று நான் வாளாயிருந்திருக்கலாமே! அதைவிட்டு அதிகப் பிரசங்கித்தனம் செய்துவிட்டு இப்பொழுது புலம்புவதில் அர்த்தம் உண்டா? என்று கேட்டது மனம், அவனுக்குச் சிரிப்பு பொங்கி வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/151&oldid=841363" இலிருந்து மீள்விக்கப்பட்டது