பக்கம்:செவ்வானம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 செவ்வாணம் மணி மூன்றுக்கு அதிகமாகவேயிருக்கும் என எண்ணினான் அவன். வான வெளியிலே சந்திரன் அசையாது தொங்கிக்கிடப்பது போல் காட்சியளித்தது. அதன் ஒளியில் ஆழ்ந்து கிடந்த அமைதிச் சூழ்நிலை அவனை வெளியே வரும்படி இழுத்தது. ரகுராமா!' என்றான் அவன் அசையவில்லை. நன்கு துங்கிக்கெண்டிருந்த நண்பனை எழுப்பி நான் போகிறேன் என்றான். 'என்ன, விடிந்துவிட்டதா?’ என்று துக்கக் கலக்கத்துடன் கேட்டான் அவன். விடியப்போகுது எனச் சொல்லி எழுந்து வெளியே வந்து, இரவின் குளிர், நிலவொளி அனைத்தையும் ரசித்தபடி நடந்து தனது அறையை அடைந்தான் தாமோதரன். பூட்டைத் திறக்கச் சாவி எடுத்ததும், திடுக்கிட்டான். பூட்டே இல்லை அங்கு கதவைத் தள்ளினான். திறந்து கொண்டது. வியப் புடன் உள்ளே நுழைந்த தாமோதரனின் திகைப்பு அதிகரித்தது. 29 அறைக் கதவைத் திறந்த தாமோதரன் திடுக்கிட்டு நின்றான். வெளியுலகில் பிரகாசித்த நிலவின் ஒளிவெள்ளத்தினால் அறையும் வெளிரிட்டது. விளக்கின் உதவியில்லாமலே, அந்த அறை காட்சி தந்த குழப்ப நிலையை அவன் உணர முடிந்தது. புத்தகங்கள் எல்லாம் கீழே சிதறுண்டு கிடந்தன. பல தாறுமாறாகக் கிழிக்கப்பட்டு அவற்றின் தாள்கள் எங்கும் பரவி விழுந்திருந்தன. அறையின் நடுவில் சில புத்தகங்கள் ஒரே குவியலாகக் கிடந்தன. தாமோதரன்அவசரமாக உள்ளே நுழைந்து விளக்கேற்றினான். அறையின் மத்தியிலிருந்த குவியலில் சாம்பல் படிந்திருந்தது. பாதி எரிந்தும் எரியாமலும் கிடந்த கரித்தாள்கள் நெடுகிலும் சிதறியிருந்தன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/152&oldid=841364" இலிருந்து மீள்விக்கப்பட்டது