பக்கம்:செவ்வானம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

喜。 செவ்வானம் ஆனால் அவர் சுக செளக்கியங்களை அனுபவிக்க முடிகிறது பணத்திலே மயங்கும் பட்டுப்பூச்சிகளைக் கவர்ந்திழுப்பது சாத்தியமாகிறது. அவர் தயவைப் பெற்றுவிட்ட நடிகைகள் பிறரது வியப்புக்கும் பொறாமைக்கும் உரிய பிம்பங்களாகத் திகழ்கிறார்கள். சிவசைலம் சரியான புளியங்கொம்பைப் பிடித்துவிட்டார். அவருக்குக் கவலையில்லை. வாழவேண்டும் என்பதுதான் அவரது லட்சியம் எப்படி என்கிற பிரச்னையைப் பற்றி அவர் சிந்திப்பதே கிடையாது. ஆனால் நானும் குமுதமும் தாமோதரனின் எண்ண ஓட்டம் தடைப்பட்டது. இன்னும் விடியவில்லை தெளிந்த நீர்ச்சுனையின் அடித்தளத்திலே கிடந்து மினுக்கும் சிப்பிகள், கற்கள் போல் வான ஆழத்தில் பதிந்திருந்த து வெள்ளிகள் தோன்றின பளிச்செனப் பிரகாசித்த நிலவு ធ្វ விடிய இன்னும் வெகுநேரம் இருக்கும் போலும் என்ற மயக்கத்தை சிருஷ்டித்துக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் நடந்து கொண்டிருந்தார்கள். ப்பொழுதுகூட இவள் பெயர் வீணாக அடிபடும் நாங்கள் இருவரும் கூடிப்பேசி ஒடிவிட்டோம் என்ற பழிச்சொல்தான் ஊரெங்கும் பரவும் என்ற நினைப்பு எழுந்தது அவன் உள்ளத்தில் 'அதைத் தடுக்கவேண்டும். அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு' என்றது அவன் இதயஒலி, 'குமுதம்' என்றான் தாமோதரன். குனிந்த தலையுடன் நடந்த குமுதம் நிமிர்ந்து அவன்முகத்தைப் r பார்த்தாள். நிலவு அவள் கண்களில் நீர் தேங்கி நிற்பதைக் காட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/158&oldid=841370" இலிருந்து மீள்விக்கப்பட்டது