பக்கம்:செவ்வானம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 செவ்வானம் நான் எதற்காகத் தலைவராகவேண்டும்? தலைவன் என்பவன் ஆயிரமாயிரம் மக்களை ஆட்டிவைக்கும் சக்தியாவதுமுண்டு. சுற்றியுள்ள ஒரு சிலரால் ஆட்டிவைக்கப்படும் பொம்மையாக மாறி விடுவதும் உண்டு தலைவன் மக்களின் வழிகாட்டியாவதுமுண்டு: மக்களின் சுமையாக மாறிவிடுவதும் உண்டு.தலைவன் சமுதாயத்தின் நல்லவனாகத்திகழ்வதுமுண்டு நாசகாரியாக விளங்குவதும் உண்டு. நான் தலைவனாக விரும்புவதுமில்லை. தலைவனுக்கு அடிபணிய அவாவுவதும் இல்லை என்று அழுத்தமாகக் கூறினான். இதனால் ஆத்திரமடைந்த ஒருவர் 'உங்களுக்குப் புகழ்பாட ஒருவரும் சேராததனால்தான் இப்படிப் பேசுகிறீர்கள் போலும் என்றார். அவன் சிரித்தான். ‘ஹஹஹ் புகழ் உமது காசியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக உமக்குப் பணச்செலவு ஏற்படாத வகையில் நீர் தாராளமாக அள்ளி வழங்கும் கைக்கூலி - இல்லை. வாய்க்கரிசி தானே புகழ்? அதை உம்மால் மறுக்க முடியுமா? என்று கேட்டு மற்றவரை வாயடைக்கச் தாமோதரன் ஒரு மேதை என்றார்கள் சிலர் இல்லை, அவன் முட்டாளேதான் என்று அடித்துச் சொன்னார்கள் பலர். அவன் சிந்திக்கத்தெரிந்தவன் என்பது சிலரது கருத்து. இருக்கலாம். ஆனால் உருப்படத் தெரியாதவன் என்பது பலரது அபிப்பிராயம். எனினும் அவனுக்குப் பெயர் வந்து சேர்ந்துகொண்டிருந்தது. அதைப் பற்றிக்கூட தாமோதரன் தயங்காமல் சொல்லுவான். இந்த உலகத்திலே எவன்தான் பெயர் பெற முடியாது? டுத்தெருவிலே நின்று பைத்தியமாகக் கத்தினாலும், திடீரெனப் பயாட்டம் போட்டாலும்கூடப் பேர் வரத்தான்செய்யும். கூரை மீதிருந்து குதியும் அல்லது கோபுரத்து மேலே நின்று டான்ஸ் 1ண்ணும். நீர்கூடச் சுலபமாகப் பேர் பெற்றுவிடலாம்: o {...} ஆகவே, தாமோதரன் ஸ்டன்ட்வேலைகளில் வேண்டுமென்றே ஈடுபடுவதாக ஓர் அபிப்பிராயம் பரவி வந்ததிலும் வியப்பில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/16&oldid=841372" இலிருந்து மீள்விக்கப்பட்டது