பக்கம்:செவ்வானம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 15& வாரத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் வெற்றிகரமாகத் திருமணம் செய்துகொண்ட சில தினங்களுக்குப்பிறகு, இவ்விருவர் செயலும் முதலில் எல்லோருக்கும் எதிர்பாரா ஆச்சரியமாக இருந்தது. இஷ்டம்போல் பேசுவதற்கு உரிய விஷயமாயிற்று. பிறகு அனைவரது போற்றுதலையும் பெறும் காரியமாக விளங்கியது சிவசைலம் இதை எதிர்பார்க்கவே யில்லை. எதனாலோ அவர்கள் பாதையில் அப்புறம் அவர் சனியன் போல் தலை யிடவுமில்லை. அவர்கள் பண்பு தனக்குத் தோல்வியளிக்கும் வஜ்ரசக்தி என்று எண்ணினாரோ அல்லது இதுவரை செய்ததே போதிய பாடம் கற்பித்திருக்கும் என்று கருதிவிட்டாரோ தெரியவில்லை. தாமோதரன் செய்து முடித்த ஒரே ஒரு புத்திசாலித்தனமான காரியம் இதுதான் என்று உற்சாகமாகத்திருமண வாழ்த்துக் கூறினான் ரகுராமன். - - கொஞ்சகாலம் உல்லாசமாக ஊர்சுற்றிவிட்டு, பிறகு வந்து இங்கேயே தங்கி நமது திட்டங்களைச் செயலாற்றலாம் என்று முடிவு செய்தான் தாமோதரன் அவன் செய்யும் தீர்மானங்களை அவள் எதிர்ப்பாள், என்று எதிர்பார்க்க முடியாதுதான்! இனிய வேளையில் குதூகலமாய் நடந்து கொண்டிருந்தார்கள் இருவரும். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? என்று கேட்டாள் குமுதம். 'எது? என்று அவள் முகம் நோக்கினான் அவன். 'உங்களுக்கு நான் முதலில் எழுதிய கடிதத்தில் குறிப் பிட்டிருந்தேனே என்னைக் சாகவிடாமல் தடுத்ததற்காக நான் நன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/161&oldid=841374" இலிருந்து மீள்விக்கப்பட்டது