பக்கம்:செவ்வானம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 21 அந்த உற்சாகத்தில் அவர் உலகை மறந்தார்.தன்னையே மறந்து ஆழ்துயிலில் கலந்தார். அப்பொழுதும் விசிறி சுழன்று ஒலி எழுப்பிக் கொண்டு தானிருந்தது. ஆனால் அது இன்பத் தாலாட்டாயிற்று காலத்தை அளக்க முயலும் கடியாரம் அர்த்தமற்ற வெற்றிச் சிரிப்பை அடித்துச் சொன்னது, ஓங்கி ஒலித்த மூன்று துடிப்புகள் மூலம் 4 இரவு மூன்றரை மணிக்குத் தனியிடத்தில் ஒரு பெண்ணின் கையைப் பற்றி இழுக்க நேரிடும் என்று தாமோதரன் கனவுகூடக் கண்டிருக்கமுடியாது. ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் நிகழும் இந்த உலகத்திலே இவ்விதம் நடந்துவிட்டது வியப்பல்ல. எனினும் அவன் திகைப்புற்றான். அவனைப் போலவேதான் அவளும் திடுக்கிட்டு நின்றாள் தற்கொலை செய்துகொள்ளத் துணிந்த அவள் தேகம் பயத்தால் நடுங்கியது இப்போது. யாரோ, எவனோ என்று அச்சுற்ற அந்த யுவதியின் கண்கள், இரவின் விழிகளான நட்சத்திரங்கள் சிதறிய மங்கல் ஒளியில் எதிரே நிற்பது ஒரு வாலிபன் எனக் கண்டன அவளது உள்ளக் குழப்பம் அதிகரித்தது. அந்நேரத்தில் தாங்களிருவரும் அப்படி நிற்பதை எவரேனும் கண்டால் ஆபத்துதான் விபரீத அர்த்தம் கற்பித்து எவ்வளவோ கதை கட்டி விடுவார்கள் என்று அவன் உள்ளம் பேசியது. சட்டென அவன் தன் கையை மீட்டுக் கொண்டான். அதற்கு முன்னரே என்னை விடுங்கள். சாக முயலும் என்னை ஏன் சனியன் மாதிரி வந்து தடுக்கிறீர்கள்?' என்று எரிந்து விழ வேண்டும் என்று எண்ணிய அந்த யுவதிக்கு அதற்குரிய துணிச்சல்தான் வரவில்லை. அதனால் அவள் தரையைப் பார்த்தாள். எதிரே நின்ற அவனை நோக்கினாள். இருளில் கலந்து திகழ்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/23&oldid=841383" இலிருந்து மீள்விக்கப்பட்டது