பக்கம்:செவ்வானம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 செவ்வானம் 2 சூழ்நிலையைக் கவனித்தாள். வான வெளியையும் ஆராய்ந்தாள். எங்கும் நீந்திய பார்வை அவளை ஆட்கொண்டிருக்க வேண்டிய கிணற்றின் மீதும் பாய்ந்தது. அவள் பெருமூச்செறிந்தாள். அவர்களிடையே நிலவிய மெளனம் பெரும் சுமையாக, வேதனையாகத் தோன்றியது. அவள் நெடுமூச்செறிந்தாள். அவள் பேசவில்லை. தானும் சும்மா நிற்பது சரியல்ல என எண்ணிய தாமோதரன் சொன்னான் அம்மா, நீ ஏன் சாகத் துணிந்தாய்? இந்த இளவயதில் உனக்கு உலகத்தின் மீதே வெறுப்பு ஏற்பட்டுவிட்டதா என்ன?” . அவள் பேசாமடந்தையாக நின்றாள். அவள் விழிகள் பேசிய பாஷையைப் புரிந்து கொள்வதற்குப் போதுமான ஒளி அப்போது அங்கு இல்லை. தாமோதரன் தானாகவே சிரித்துக் கொண்டான். அவன் தன்னைக் கேலி செய்கிறான் என எண்ணினாள் அவள். நான் எப்படி நாசமானால் உங்களுக்கென்ன? இந்த வேளையில் நீங்கள் வரவில்லை என்று யாரும் அழவில்லை!" என்று முனங்கினாள் யுவதி. அவள் செயலும், மெளனமும் அவனுக்கு வேடிக்கையாகப் பட்டன முதலில் அவள் பேச்சு அதிக விசித்திரமாக ஒலித்தது. இப்பொழுது அவன் உள்ளம் சிரித்தது. 'அம்மா புண்ணியவதி நான் ஆபத்பாந்தவனின் அவதாரமல்ல. சாகப்போகிறவர்கள்முன் திடீரெனத் தோன்றி சித்து விளையாடல்கள் புரியும் சிவனாருமல்ல. நீ நாசமாய்ப் போவது உனது தனி மனித உரிமை. ஆனால் விழுந்து சாவதற்கு இந்தக் கிணறுதானா கிடைத்தது?’ என்று பேசினான். அவன் குரலின் எக்காளம் அவள் இதயத்தில் தைத்தது. சாவதற்கு எந்த இடமாக இருந்தாலென்னவாம்? என்றாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/24&oldid=841384" இலிருந்து மீள்விக்கப்பட்டது