பக்கம்:செவ்வானம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 23 இன்றைய சமுதாயத்தில் பெரும்பாலான மக்களுக்கு சுகமாக வாழ உரிமையில்லை. சாவதற்குக்கூட உரிமை கிடையாது. அதை மீறிச் செத்துத் தொலைக்கிறவர்கள் பிறகு இருப்பவர்களுக்கு வேண்டாத வினையையெல்லாம் தேடி வைக்கிறார்கள். நீ யாரோ ஏனோ எங்கிருந்தோ வந்து இந்தக் கிணற்றில் விழுந்து செத்துவிடலாம். அப்புறம் என்மீது வீணான சந்தேகங்கள் கிளம்பும். நான்தான் உன்னைக் கொலை செய்தேன் என்றுகூடக் குற்றம் சாட்டிவிடுவார்கள். அதைப்பற்றி நீ எங்கே யோசித்திருக்கப் போகிறாய்! என்றான் அவன், அவன் விநோதமான பேர்வழிதான் என்று தோன்றியது அவளுக்கு. அதெப்படிச் சொல்லுவார்கள் நானாக சாகத் துணிகிற போது' என்று இழுத்தாள். 'நீ சாகத் துணிந்திருக்கலாம். ஆனால் நீ சாக விரும்பவில்லை' என்று சிரித்தான் அவன். அவளுக்கு கோபம் வந்தது. சினுங்கினாள். உங்களுக்குத் தானே அது தெரியும் சாகவிரும்பவில்லையாம். ரொம்ப தெரிந்தவர் மாதிரி பேச வந்து விட்டார் என்று. அவன் மேலும் சிரித்தான். 'அம்மணி!" என்று பேசத் தொடங்கியவனுக்குத் தடை போட்டது அவள் சொல் வீச்சு. இந்தா பாருங்க. என்னை நீங்க புண்ணியவதி, அம்மணி, பெண்மணி, கண்மணி என்றெல்லாம் கூப்பிடவேண்டாம் நாடகத்திலே பேசுகிற மாதிரி. - நான் உன்னைக் கண்மணி என்று அழைக்கவில்லையே. அப்படி அழைக்கவும்.துணிவு வராது எனக்கு என்றான்.தாமோதரன். அதுதான் தெரியுதே' என்று எரிந்து விழுந்தாள் அவள். 'TTಣಹಿಂಗ தெரிந்துவிட்டது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/25&oldid=841385" இலிருந்து மீள்விக்கப்பட்டது