பக்கம்:செவ்வானம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 செவ்வானம் உங்களுக்குப் பெண்களோடு பேசத் தெரியாது. அதிலும் யுவதிகளுடன் எப்படிப் பழகவேண்டும் என்பதே தெரியாது. அதிலும் நள்ளிரவில், தன்னந்தனியாக நிற்கும் அபலைப் பெண்ணிடம் எவ்விதம் நடந்து கொள்ளவேண்டும் என்பது நிச்சயமாகத் தெரியாது உங்களுக்கு அனுபவம் போதவே போதாது - இதெல்லாம்தான்' 'உனது சர்டிபிகேட் பெற முடிந்ததே. அதற்காக மிக்க மகிழ்ச்சி, நன்றியும் கூட' புதிதாகக் காணும் பெண்ணை முதலிலேயே நீ வா, போ என்று பேசுவதுதான் நீங்கள் பழகக் கற்றுக்கொண்ட லெட்சணம் என்பதும் புரிகிறது என்றாள் அவள் நியாயம்தான். உனது கோபத்தின் காரணம் எனக்கும் புரிகிறது. அம்மா நீங்கள் யார்? ஏனிப்படித்தற்கொலை செய்யத்துணிந்தீர்கள் என்று நான் கேட்டிருக்கவேண்டும். உடனே நீ நான் என்ன அவ்வளவு வயசானவளா? எனக்கெதற்கு அம்மா பட்டம், கள் உபசாரமெல்லாம் என்று சொல்வாய், பிறகு நீ , உன், உன்னை என்றெல்லாம் நான் பேசினால் ஒரு தவறுமில்லை. நீ மகிழ்வுடன் உன் பெயரைக்கூடச் சொல்லியிருப்பாய் இல்லையா? அம்மா சாகத் துணிந்தவளே.' நீர் மரியாதை தெரியாத பேர்வழி என்னை விட்டு விட்டு உம் வேலையைக் கவனிக்கப்போம் என்று சீறினாள் மங்கை. 'இப்போது நான் உன்னைக் கையைப் பிடித்து நிறுத்தி வைத்திருக்கவில்லை. நீ உண்மையாகவே சாக விரும்பினால் இதற்குள் கிணற்றினுள் பாய்ந்திருக்கலாம். ஆரம்பத்தில்கூட நீ சாக அஞ்சினாய் என்பதை ரொம்ப நேரம் நீ தயங்கித் தயங்கி அலைந்த செயலே அம்பலப்படுத்தியது. நான் வராவிட்டால் - உன்னைத் துரத்திக்கொண்டு ஓடாமலிருந்தால் நீயாகவே உன் வீட்டுக்கு திரும்பிப் போயிருந்திருப்பாய். என்னைக் கண்டதும் எவனோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/26&oldid=841387" இலிருந்து மீள்விக்கப்பட்டது