பக்கம்:செவ்வானம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 25 அயோக்கியன், திருடன், கயவன் என்று எண்ணியோ - உணர்ச்சி வெறியின் உந்துதலினாலோ - கிணற்றில் விழ முன்னேறிவிட்டாய் அப்பொழுதுகூட நீ சட்டென்று குதித்துவிடவில்லை. துவளத்தின் மேல் நின்று விழலாமா வேண்டாமா என்று குறி கேட்டுக் கொண்டிருந்தாய். உனக்கு எந்த தேவியும் - அல்லது தேவனோ - அருள் புரியவில்லை! 'ஏன், நீங்கள்தான் அருள் புரிய ஒடிவந்தீர்களே! என்று கூறிக் கலகலவென நகைத்தாள் அவள். நினைத்தேன்' என்றான் அவன். ‘என்னது என்று நினைத்தீர்கள்? 'நீ அனுபவப் பள்ளியில் கற்றுத் தேர்ந்த கைகாரி என்றுதான்' என்று சொல்லிச் சிரித்தான் தாமோதரன். அவளுக்குக் கோபமும் வெட்கமும் பொங்கி வந்தன. 'அதெல்லாமில்லை. நீங்கள் என்னைத் தவறாக மதிப்பிட்டு விட்டீர்கள். நான் வாழ விரும்புகிறேன். ஆனால் வாழ்க்கையில் பலவிதமாக வஞ்சிக்கப்பட்டவள் நான் எனக்கும் உயிராசை உண்டுதான். ஆனால் சூழ்நிலையும் சுற்றமும் நீ செத்துத் தொலைந்தால் நல்லது என்று சபிக்கின்றன. நான் என்ன செய்வது? என்று முனங்கினாள் அவள். விடிவதற்கு இன்னும் எவ்வளவோ நேரமிருந்தது. மங்கலாக மினுக்கிக் கொண்டிருந்த நட்சத்திரக் கூட்டங்களிடையே தனிப்பெரும் ஒளியாகத் திகழத் தொடங்கியது விடிவெள்ளி. இருள் கவிந்த உலகிலே குளிர் காற்று நாட்டியமாடிக் கொண்டிருந்தது. விண்ணையும் மண்ணையும் பார்த்த தாமோதரன் மனதில் வேதனைதான் சுமையாகப் படிந்தது. சாவதற்காக வந்த யுவதியுடன் தனியாக வார்த்தையாடி நிற்பது அழகல்ல என்று தோன்றியது. அவளிடம் விளையாடுவதுபோல் நையாண்டிச் சொற்கள் பரிமாறிக் கொண்டிருப்பது பெருந் தவறு என எண்ணினான் வாழ்க்கையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/27&oldid=841388" இலிருந்து மீள்விக்கப்பட்டது