பக்கம்:செவ்வானம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 செவ்வாணம் வஞ்சிக்கப்பட்டு, உலகை வெறுத்து, சாவின் அணைப்பிலே அமைதி காணத் துணிய வேண்டுமெனில் அந்த அபலையின் உள்ளம் எவ்வளவு தூரம் குமுறிப் புழுங்கியிருக்க வேண்டும். அவள் மனம் நோகும்படி பேசிவிட்டோமே என வருந்தினான் அவன். போகிறது. அவளைச்சாகவிடாமல் தடுத்தாயிற்று. இனி என்ன செய்வது? மீதி இரவை அவள் எங்கே எப்படிக் கழிப்பது? இப்படி மெளனமாக நிற்க வைத்திருப்பதா? தனது அறையிலே தங்கி யிருக்கும்படி அழைப்பதா? அவன் மனம் ஒருமுடிவுக்குவர இயலவில்லை. அவளைத்தன் அறையில் தங்கும்படிக் கோருவது சரியல்ல என்று பட்டது அவனுக்கு தனது பெயரை மாசுபடுத்த விரும்புகிறவர்கள் மோசமாகப் பிரசாரம் செய்வதற்குத்தானே வழிவகுத்துக்கொடுப்பது போலாகும். தன்னால் அந்த யுவதியின் பெயர் மீது - இப்பொழுது என்ன பழி சுமந்திருப்பினும் கூட அதிகமான அநாவசியமான பழி ஏற்படக்கூடாது என விரும்பினான். அவளும் எண்ணச் சுழிப்பிலே சிக்கி மோனத்து ஆழ்ந் திருந்தாள். அவளுக்கு நிகழ்கால வேதனையை விட எதிர்கால பயம் அதிகம் அச்சுறுத்தியது வாழ்க்கை பாழாய், பயங்கரமாய், பாலைவனமாய், கொடுமையாய்க் காட்சியளித்தது அவளுக்கு. அதன் வறட்சியைத் தாங்க முடியாமல், தாக்குதலைச் சகித்துச் சகித்து மேலும் சகிக்க இயலாமல் தான் அவள் தன்னையே அழித்துக் கொள்ளத்துணிந்தாள். சாகும்வயதல்ல அவளுக்கு உயிராசைவற்றி விடவில்லை.ஆனால் எப்படிவாழ்வது? அவள் செய்யாத பாபத்தின் கறை பழியாக அவள் மீது படிந்துகிடந்தது. சமூகம் அவளையே களங்கமாக, பெருநோய் போல மதித்துக் குறைகூறிக் கொண்டிருந்தது. அவளும் எல்லாப் பெண்களையும் போல் குடும்ப விளக்காய் வாழ விரும்பினாள், ஆனால் சுற்றமும் சூழ்நிலையும் வாழவிடவில்லை. அதுமட்டுமில்லையே. அவள் வாழ்வில் தொல்லையே விதைத்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/28&oldid=841389" இலிருந்து மீள்விக்கப்பட்டது