பக்கம்:செவ்வானம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 செவ்வானம் ஒளிசிரித்தது.அந்த அறையில், இருளிடையே வேதனையுற்றுக் கிடந்த அவனுக்குமெழுகுவர்த்தியின்சிற்றொளிதனிஅழகுநிறைந்த கலைச்சுடராகக் காட்சியளித்தது. ஒளியையும் அதுவரைந்து காட்டும் நிழல்களையும், அவற்றின் அசைவுகளையும் கவனித்து நின்ற அவன் பார்வையில் ஒரு புதுமை தென்பட்டது. ஜன்னலருகே சுவரோரத்தில் வெள்ளையாக ஒரு பொருள் கிடந்தது. கோணல் மாணலாகக் கிழித்துப் போட்டிருந்த துண்டுக்கடிதம். அது அந்த இடத்தில் முன்பு கிடக்கவில்லை. முன்பு, விளக்கு இருந்தபொழுதே, அது கண்ணில் பட்டிருந்தால் அதே இடத்தில் கிடக்கும்படி அவன் அனுமதித்திருக்கமாட்டான். எடுத்துக் கசக்கி அதைச் சேரவேண்டிய இடத்திலே சேர்ந்திருப்பான். குப்பைக் கூடையில்தான். அத்தாளில் சிவப்பாக வேறு தெரிந்தது. அதனால் பரபரப்புடன் அதை எடுத்துப் பார்த்தான். அதில் சிவப்பு மையில் எழுதியிருந்தது. எச்சரிக்கை துள்ளாதே, துள்ளாதே ஆட்டுக்குட்டி கையிலே இருக்குது சூரிக்கத்தி ரத்தம் சொட்டும் கத்தியின் படமும் இருந்தது அதில், 6 தாமோதரன் பயந்துவிடவில்லை. கத்தியும் ரத்த எழுத்துக்களும் அர்த்தமற்ற மிரட்டல்களாகத்தான் தோன்றின அவனுக்கு. இத்தகைய சிறு விஷயங்களுக்கெல்லாம் பயந்து சாவதென்றால் மனிதன் உயிர் வாழவே முடியாதே என்று எண்ணினான் அவன். இந்தத் துண்டுக் கடிதத்தை யார் உள்ளே வீசி இருப்பார்கள்? எப்படி எறிந்திருக்க முடியும்?' என்று சந்தேகங்களைக் கிளப்பியது மனம். அதுவே பதிலும் கூறிக்கொண்டது. இதென்ன பிரமாதமான காரியம்! நான் அங்கே கிணற்றருகில் அந்தப் பெண்ணுடன் வாதாடிக்கொண்டிருந்த போது இந்தப் பக்கமாக எவனாவது வந்து கடிதத்தை தாராளமாக உள்ளே தள்ளியிருக்கலாமே! மறைந்து நின்றவர்களிலே ஒருவனாகத்தானிருக்கவேண்டும். அல்லது வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/36&oldid=841399" இலிருந்து மீள்விக்கப்பட்டது