பக்கம்:செவ்வானம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 35 எவனையோ கூப்பிடுவதுபோல் வாயினால் யாரோ விசிலடித்தது கேட்டதே. அப்படிச் சீழ்க்கையடித்தவனோ, அல்லது அழைக்கப் பட்டவனோ போட்டிருக்கலாம். இருள்தான் அவர்களுக்குத் துணை நிற்கிறதே. அநாவசியமாக மனதைக் குழப்பிக்கொண்டிருப்பது அர்த்த மற்ற வீண் வேலை என்று பட்டது அவனுக்கு இரவு விடைபெற்றுக் கொள்ளவேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. இனிப் படுத்துத் தூங்க முயல்வதில் பயனில்லை. துக்கம் வராது விடியும் வரை ஏதாவது புத்தகத்தைப் புரட்டிப் பொழுது போக்கலாம் என்று. நினைத்தான். - புத்தகம் ஒன்றை எடுக்கக் கைநீட்டியபோது, குறிப்புப் புத்தகத்திலே இன்றைய எண்ணங்களை எழுதிவைக்கலாமே என்ற ஆசை பிறந்தது. அதை எடுத்தான். எழுதாத பக்கத்தை முதலிலேயே திருப்பி வைத்துக் கொள்ளாமல் அங்குமிங்குமாகத் தாள்களைத் தள்ளின. அவன் விரல்கள். தனது எண்ணப்பதிவுகளிலே கவனம் தயங்கித் தயங்கி நின்று விடுவதை அவன் தடைசெய்யவில்லை. 'ஆபத்து எதிர்ப்படுவதும் சாத்தியமே. பிறருக்குப் பிடிக்காத எண்ணங்களைச் சொல்கிறவன் - காரியங்களைச் செய்கிறவன் - பிறரது பழிப்புக்கும் வசைபாடல்களுக்கும், கோபம் கொதிப்பு ஆத்திரம் முதலியவற்றிற்கும் ஆளாவதும் இயல்பே. அதற்காகத் தனக்குச் சரியென்று பட்டதைச் சொல்லாமல் இருக்கலாமா?. பெரும்பாலருக்கு நன்மை விளைவிக்கும் என்று தோன்றுகிற காரியத்தை - நிறைவேற்றும் முயற்சியில்தான் ஒருவனுக்குத் தீங்கு விளையலாம் என்ற அச்சம் காரணமாக - செய்யாமல் விடலாமா? அவன் விரல்கள் மேலும் சில பக்கங்களைத் தள்ளின. ஒரு இடத்திலே அவன் குறித்திருந்தான் மக்களுக்கு யார் நல்லதிைச் சொல்கிறார்கள்? யார் எதற்காக என்னென்ன கூறுகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளும் சக்தி கிடையாது என்றே எனக்குத் தோன்று. கிறது. சிந்திக்கும் திறமையிருந்தாலும் அதை உபயோகிக்கிறவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/37&oldid=841400" இலிருந்து மீள்விக்கப்பட்டது