பக்கம்:செவ்வானம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 57 இவையெல்லாம் பிறக்கின்றன. மக்கள் இவற்றைப்பற்றிக் கவலைக் கொள்வதேயில்லை. சிரத்தைகொள்வதானால், கலை, இலக்கியம், சமுதாயம், அரசியல் முதலிய பலவும் இன்றைய நிலையிலோ இரா. இதை உணர வேண்டும் மனிதர்கள். உணரும்படி துண்டிவிட வேண்டியதுதான் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொருவனது கடமையுமாகும்.' தாமோதரன் தனது எண்ணச் சூழலில் மேலும் சிக்கித்திணறுவது இயற்கைக்கே பொறுக்கவில்லை போலும் தூக்கம் அவனைக் கிரக்கியது. கண்கள் சொக்கின. முயன்றும் விழித்திருக்க முடிய வில்லை அவனால், மெழுகுவர்த்திச் சுடரை அணைத்து விட்டு அவன்படுத்தான். வெளியே இருள் விலகிக் கொண்டிருந்தது. பறவைகளின் கலகலப்பு சூழ்நிலைக்கு உயிரொலி கொடுத்தது சேவல் ஒன்று கொக்கரித்தது. எல்லாம் கனவுலக நிகழ்ச்சிகள் போல் பட்டன அவனுக்கு. அவன் சுகமான தூக்கத்தில் ஆழ்ந்து விட்டான். அவனது எண்ணக் குழப்பங்கள் மிகக் களைப்புற்றுவிட்ட அவனை எதுவும் செய்யமுடியவில்லை! 7 முதலாளி புன்னைவனம் பலரகக் கலாசாரங்களின் கலப்படம் என்பதை அவருடைய தோற்றம் மாத்திரமல்ல, அவர் வசிக்கும் வீடும் - வீட்டின் ஒவ்வொரு அறையும் - எடுத்துக்காட்டும், பழமையும் புதுமையும், மேற்கும் கிழக்கும் வடக்கும் தெற்கும் எல்லாம் ஏககாலத்தில் சேர்ந்துவிட முயலும் விசித்திரத்தை அவருடைய சூழ்நிலை சித்தரிக்கும். அவருடைய நடையுடை பாவனைகள் அம்பலப்படுத்தும். முதலாளியின் தனியறை அவரது பண்பாட்டைப் பிரதி பலிக்கும் சரியான உதாரணம். மிகுந்த பக்திமான்போல் பாவலாப் பண்ணுகிறவருடைய மற்றொரு பண்பும் பக்கத்திலே பக்கத்திலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/39&oldid=841402" இலிருந்து மீள்விக்கப்பட்டது