பக்கம்:செவ்வானம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 செவ்வானம் செய்யவேண்டியது தானே. அவரிடம்தான் எல்லாவற்றுக்கும் வசதிகள் இருக்கின்றனவே பின் என்ன அவர் வீட்டு அடுப்பங் கரையில்கரண்டிநாகரிகம் புகுந்தது. சாப்பாட்டுமேஜையில் இரண்டு நாட்கள் தான் வாழ முடிந்தது. அது சுகப்படலே என்று ஒதுக்கி விட்டார் புன்னைவனம். 'சோறு எடுத்துச் சாப்பிடுவதற்குக் கை தான் சரி. இது தெரியாமலா ஆண்டவன் விரல்களைக் கொடுத்திருக்கிறான்? கையிலே தனித்தனியாக ஐந்து விரல்கள் இருப்பது எவ்வளவு செளகரியமாக இருக்கிறது. இது ஒன்றே போதுமே ஆண்டவனின் திறமையை நிரூபிக்க' என்று தீர்ப்புக் கூறிவிட்டார். பூரீமான் புன்னைவனத்திற்கு ஆண்டவன் மகிமை பற்றி சாட்சி கூற இது ஒன்றே போதுமே! என்னும்படியான உதாரணங்கள் அடிக்கடி கிடைத்துக் கொண்டேயிருக்கும். தண்ணீர் என்கிற ஒன்று இல்லாமல் போனால் மனுஷ சன்மமும் வீடும் வாசலும் ஊரும் உலகமும் நாறிப் போகாதா நாறி தண்ணி இல்லையின்னா மனுஷன் எங்கேய்யாஉயிர் வாழ்றது? எப்படி வாழ முடியும்கிறேன்? அது தாராளமாகக் கிடைக்கும்படி செய்திருக் கிறானே ஆண்டவன் - இது ஒன்றே போதாதா அவன் புத்திசாலித் தனத்தை நிரூபிக்க' என்று முதலாளி ஐயா தினம் ஒரு தடவையாவது திருவாய் மலர்ந்தருளி விடுவார். இவ்வருள் மொழியைக் கேட்பதற்கு எதிரே யாருமில்லாமல் போனால், தன் நெஞ்சுக்குத் தானே உபதேசித்துக்கொள்ளத் தயங்கமாட்டார் அவர். இக்கல்யாண குணம் அவர் உள்ளத்தோடு ரொம்ப ரொம்ப ஒட்டிப் போனதினாலே, ஆண்டவனுக்கு அநாவசியமான புகழை அவர் அள்ளிக் கொடுத்து விடுவதும் சகஜமே. ஆண்டவன் பெருமையைக் கூற எலெக்டிரிக் விளக்குகள் மட்டுமே போதுமே மின்சார சக்தி மட்டும் இல்லையென்றால்..." என்று கர்ஜிக்கும் புன்னைவனத்திடம் எவராவது தெரியாத்தனமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/42&oldid=841406" இலிருந்து மீள்விக்கப்பட்டது