பக்கம்:செவ்வானம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 4贯 எதிர் மொழி பகன்று விடுவதும் உண்டு என்ன நீங்க இந்தப் புகழ் மனிதனுக்கல்லவா சேரவேண்டும் என்றுதான். தனது பணம் பறிபோய்விட்டதுபோல் ஆத்திரம் கொள்வார் அவர் 'ஏன் என்று கேட்கிறேன். மனுஷன் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாலேயும் எலெக்ட்ரிக்ஸிட்டி இருந்தது. இல்லாததை அவன் எப்ப்டிக் கண்டுபிடித்துவிட முடியும்?' என்று சீறுவார் முதலாளி. 'கண்டுபிடித்தது ஒரு அற்புதம் தானே? அதைப் பயனுள்ள பல வழிகளிலும் இயங்கச்செய்ததும் மனிதன்தானே? அவனுக்குத்தானே பாராட்டுகள் உரியன? என்று கேட்டாலோ - 'அந்த மனிதனை ஆண்டவன்தானே படைத்தான்! அப்படி யானால் ஆண்டவனை அதிகமாக அல்லவா நாம் புகழவேணும்! என்று கூறி, அட்டகாசமாகக் கனைப்பார் அவர் ஆண்டவன் புகழ்ச்சியில் அவ்வளவு ஈடுபாடு அவருக்கு. ஆகவே, புன்னைவனம் கோயிலைக்காணும் இடங்களில் எல்லாம் நின்று, மேல் அங்கவஸ்திரத்தைக் கொஞ்சம் கீழிறக்கி, கால் செருப்பைக் கழற்றிவிட்டு வினயமாகக் கும்பிடு போடுவதில் வியப்பில்லைதான். சிறு பிராயத்திலிருந்து அழுத்தமாகப் படிந்து விட்ட பழக்கம் இது. விடாத பண்பாக வளர்ந்து வருவது, இப்பொழுது கோட்டு மாட்டிக்கொண்டு காரிலே பிரயாணம் செய்யும்போது கூட கால்செருப்பை உதறி விட்டு, கையெடுத்துக் கும்பிடுவார் - உட்கார்ந்தபடியேதான் - கோயிலைக் காணும் பொழுது - - பணம் நிறைய யிருந்தது. அது வளர்ந்துகொண்டேபோகும் கவலைப்பட வேண்டியதில்லை. பணமும் சுகவாசமும் இருந்தால் மட்டும் போதுமா? புகழ்ப் பசி நெஞ்சில் அரிப்பெழுப்பியது. அரசியல், கலை, சமூகசேவை என்று பெயர் பண்ணுவதில் அக்கறை காட்டினார் முதலாளி. அவருக்குச் சரியான துணையாகச் சேர்ந்தார் சிவசைலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/43&oldid=841407" இலிருந்து மீள்விக்கப்பட்டது