பக்கம்:செவ்வானம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 47 திடீரென்று எனக்கு அப்படித் தோன்றியது. அவன் வெறித்தனமாக உளறிக்கொண்டு திரிகிறான் பாருங்க அதனாலே ஆச்ாமி குடித்துவிட்டுத் தான் அப்படி நிதானம் தவறிப் பிதற்றிக்கொண்டு அலைகிறான் என்று அம்பலப்படுத்தினால் பலரும் நம்பாமலா போவாங்க? அவனுக்குத் தெரியாமல் அவன் வீட்டிலே கொஞ்சம் புட்டிகளைக் கொண்டு போய் வைத்துவிட வேண்டியது. அப்புறம் கள்ளச் சாராயம் வைத்திருக்கிறான் என்று வசமாகச்சிக்கிக் கொள்ளும்படி செய்துவிடலாம். என்ன நான் சொல்வது? என்று கேட்டார் அவர். நல்ல யோசனைதான். அவசியமானால் இதைக் கையாளலாம். அநாவசியமாக நீங்கள் அந்த வீணனைப் பற்றி நினைத்து வீண் பொழுது போக்க வேண்டாம் அவனை நான் கவனித்துக் கொள்கிறேன்' என்று அபயமளித்தார் சிவசைலம். 9 வாழ விரும்பியவள் அவள். ஆனால் வாழ்க்கை அவளுக்கு நல்வழி வகுத்துக் காட்டவில்லை. வாழத் தெரியாதவள் என்று மற்றவர்கள் சொல்லலாம். அது தவறான மதிப்புரை. வாழ முடியாதவள் அவள் வாழத் தெரியாத வர்களின் சொல்லும் செயலும் தந்த தொல்லைகளினால் வாழ முடியாமற் போனவள் அவள் வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப் பெற்றுள்ள கோடி கோடிப் பேர்கள் நிறைந்த மனித சமுத்திரத்திலே ஒரு சிறு துளி. அவள் தவறிழைக்கவில்லை. அவள் வழுக்கிவிழவில்லை. மணமாகி மாங்கல்யம் இழக்கவில்லை. காலம் எற்றிவிட்ட ஏறு அலைமீது தவழ்ந்து, சந்தர்ப்பம் இழுத்துவிட்டஇறங்கு அலையோடு கீழே சரிந்து விட்டவளல்ல. அவள் வாழவேயில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/49&oldid=841413" இலிருந்து மீள்விக்கப்பட்டது