பக்கம்:செவ்வானம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 செவ்வாணம் வாழும் ஆசையிருந்தது. வாழத் துடித்தாள். ஆனால் வழியடைத்துவிட்டன சுற்றமும் சூழலும், சுவரெழுப்பி நின்றது பிறர் மீது படிந்த பழியின் நினைவு. அவள் களங்கம் அல்ல. சிறுமையின் சின்னம் அல்ல. அவமான அவதாரம் இல்லவே இல்லை. ஆனால் அவளைக் களங்கமாய், சிறுமையின் சிருஷ்டியாய், அவமானத்தின் மலர்ச்சியாக மதிப்பிட்டனர் வாழத் தெரியாத வாழ விரும்புகிறவர்களையும் வாழவிடாத - மடையர்கள். தம் குறை மறந்து பிறர் குறையைத் தம்பட்டமடிக்கிற மனித சமுதாயத்திலே. இருக்கின்ற சிறு குறைகளைக் கூடப் பேயாய், பூதமாய் பயங்கரமாய் வரைந்து காட்டுகிற வர்க்கத்திலே, இல்லாத தவறுகளைப் பெரும் பழியாய் சிறுமையாய் சீரழிவாய்ச் சித்திரிக்கிறவர்கள் நிறைந்த சூழ்நிலையிலே அவள் வாழ முடியாமல் போனது அவள் தவறே அல்ல. அவளுக்குவயது இருபது. அவள் காலத்தை எதிர்த்து வாழ்ந்து விடலாம் என நம்பினாள். ஆனால் சந்தர்ப்பங்கள் சதி செய்து விட்டன. வாழ விரும்பி, முன்னேற்றத்திற்குத் திட்டமிடுகிறவர்களை அமுக்கித் தன் இஷ்டம் போல் பிடித்துத் தள்ளிச் சின்னா பின்னப்படுத்துகிற சதிகார கால வேகத்தின் முன்னிலே துணையற்ற அபலை எவ்வளவு சமாளித்து நின்று விட முடியும்? அவள் பொறுத்துப் பார்த்தாள். சகிப்புத் தன்மையும், வாழ்வின் கசப்பும் அவளுக்கு சிரிக்கும் பண்பை அளித்தன. அவள் சிரிப்பிலே மனநிறைவின் இனிமையில்லை. இதயக் குமுறலின் தகிக்கும் அனலே மின்னியது. அவள் சிரிப்பு பிறர் உள்ளத்தில் சூடெழுப்பும் நெருப்பு. வாழ்க்கை வெயில் அவள் உள்ளத்தைக் காளவாயாக மாற்றி விட்டது. காலம் அங்குகுளுமை பிறக்கவகைசெய்யவில்லை. அவள் தனியள் துணையெனும் பெயரால் நெருங்கி அவளைப் பாழ்படுத்தி விடலாம் என்று எண்ணிய கள்ள நெஞ்சினருக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/50&oldid=841415" இலிருந்து மீள்விக்கப்பட்டது