பக்கம்:செவ்வானம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 49 கணக்குக் கிடையாது. ஆனால் அவள் விழித்திருந்த புதுயுக மங்கை, பிறரது பாச்சாப் பலிக்கவில்லை. அவள் துணையிலாள். அவளுக்கு உதவி செய்வதாகச் சொல்லி ஏமாற்றி அவளைச் சிறுமையில் தள்ளி விடலாம் என ஆசை கொண்ட குள்ள மனத்தினர் பலர். ஆனால் அவளது குணநிறைவு அவளுக்கு அரணாக நின்றது. அணுக முடியாதவர்கள் அவள் போக்கை எண்ணிச் சீறினர். அவள் பெண். யுவதி, அனுபவமில்லாதவள். ஆகவே தங்கள் இஷ்டம்போல் எற்றியோ, நகர்த்தியோ, ஆட்டியோ அலைக்கழிக்கச் கூடிய சொக்கட்டான் காயாக மாற்றி விடலாம் அவளை. இவ்விதம் எண்ணியவர்கள் எவ்வளவோ பேர். எனினும் அவளது உள்ளத்தின் உறுதி அவர்கள் எண்ணத்தில் மண்ணைப் போட்டது. அவள் இஷ்டம்போல் - தங்களை நாடாமல் தங்கள் தயவை எதிர்பாராமல், தங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் தலை வனங்காமல் தங்களை அலட்சியப்படுத்தியபடியே வாழ்ந்து விடுவாளோ என்று அஞ்சினர் பிறர் அது அநீதி எனப் பொருமினர். பொங்கி எழுந்தனர். பொறாமை கொண்டனர். பூசினர் களங்கச் சாயம், வீசினர் பழிச்சொல். எறிந்தனர் பாபச் சுமையை. அவள் பாபம் செய்யவில்லை. ஆனால் அவள் பிறப்பு பாபத்தின் ஊற்றுக்கண் என்றார்கள். அவள்கறையை விதைக்கவில்லை. ஆயினும் அவள் மீது கறை படிந்துவிட்டது அவள்ை பெற்றவர்களின் செயலினாலே என்று கூக்குரலிட்டனர். அவள் களங்கமற்றவள். எனினும் அவள் களங்கத்தின் விளைவு என்று குற்றம் சாட்டினார்கள். அதனால், அவள் சமுதாயத்தின் காளான், தர்மத்தின் கறையான். ஆகவே நல் வாழ்வு அவளுக்குக் கிடையாது என்று ஆரவாரித்தார்கள். அவளைக் கெட்டவளாக மாற்ற விரும்பிய கெட்டவர்கள் நல்லவர்கள் போல் நடித்து அவள் பிறப்பினால் கெட்டவள். ஆகவே செ. - 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/51&oldid=841416" இலிருந்து மீள்விக்கப்பட்டது