பக்கம்:செவ்வானம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவ்வானம் 53 பெயரினாலும் கெட்டவளே என்று தீர்ப்புக் கூறிவிட்டார்கள். அந்நிலையில் கூட, அவள் உண்மையாகவே கெட்டுப்போகத் தயாராகயிருந்தால் அவளுக்குப் பணமும் புகழும், அன்பும் உபசாரமும், கெளரவமும் உறவும் ஏராளமாகவே கிடைத்திருக்கும். அதை அவள் விரும்பவில்லை. நல்லவை வாழ்ந்து உயர முடியாத இந்தச் சமுதாயத்திலே, கெட்டவை ஓங்கி வளர்ந்து படாடோட ஆட்சி புரிவதைக் கண்டு குமைந்த அவள் தான் வாழ முடியாது என்று நினைத்தாள். பின் தன்னை அழித்துவிடுவதுதான் வாழ்க்கைக் கணக்குக்குதான்காணும் விடை என்று முடிவுகட்டினாள் வாழவிடாத சமூகமும் காலமும் யாரையும் எளிதில் சாகும்படி விடுவதுமில்லை என்பது அவளுக்குத் தெரியாது. சாகத் துணிந்தாள். உயிராசை தயக்கத்தை விதைத்தது. அவள் தயக்கம் அவனை விழிப்புறும்படிச் செய்தது. அவன் அவளைச் சாகவிடாமல் தடுத்துவிட்டான். அவள் பெயர் குமுதம், அவன் தான் தாமோதரன். சாகாதே என்று தடுத்தான். வாழ வழிகாட்டினானா? ஏன் வாழ வேண்டும் இல்லை; ஏன் சாகக்கூடாது என்று காரணம் கூறினானா? கிடையாது. அவளைச் சாவுக் கிடங்கிலே பாய்ந்து விடாதபடி பின்னின்று இழுத்தான். அவளைப் பின்னுக்கிழுத்த உயிராசைக்குத் துணை புரிவது போல. சாகத் துணிந்து விட்டாலும், உண்மையிலேயே சாக விரும்பாத, செத்துப்போகும் துணிவைப் பெறாத, குமுதம் மகிழ்வுற்றாள். பிழைக்க முடிந்ததே என்று தான். மரணத்தைத் தழுவி ஒடினும் மனிதன் ஒருவன் தன்னைத் தடுத்து விட்டான் என்று சொல்லிக் கொள்ள முடியுமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/52&oldid=841417" இலிருந்து மீள்விக்கப்பட்டது